திஷா பதானியின் முகம் இப்படி வாடிப்போச்சே? யார் காரணம்? என்ன காரணம்? கவலையில் உச்சு கொட்டும் ரசிகர்கள்
மும்பை: நடிகை திஷா பதானி இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக உள்ளார். கவர்ச்சியாக நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை அவர் உருவாக்கி வைத்துள்ளார். தமிழில் கங்குவா, தெலுங்கில் கல்கி என தென்னிந்திய படங்களிலும் பாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல், திஷா பதானி மாடல் அழகியாகவும் கெரியரில் கலக்கி வருகிறார். அப்படி இருக்கையில் அவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் சோர்வாக காணப்பட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகை திஷா பதானியின் கதை பலருக்கும் பல ஆச்சரியங்களை கொடுக்கும் அளவுக்கு இருக்கிறது எனலாம். தனது கல்லூரிக் காலத்தில் தான் இந்திய விமானப்படையில் இணைந்து விமானியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அதன் பின்னர் தான் 2013-ம் ஆண்டு நடந்த 'ஃபெமினா மிஸ் இந்தியா' இந்தூர் போட்டியில் திஷா பதானி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதில் இருந்து தான் அவரது வாழ்க்கை மெல்ல மெல்ல சினிமாவை நோக்கி நகர்ந்தது.
தற்போது பான் இந்தியா அளவில் கலக்கிக் கொண்டு இருந்தாலும் அவரது முதல் படம் அதாவது இவர் அறிமுகமானது லோஃபர் என்ற தெல்ங்கு படத்தில் தான். இப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. கடந்த 11 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக் கொண்டு உள்ளார். அது மட்டும் இல்லாமல் விளம்பர மாடலாகவும் சக்கை வருமானம் பார்த்து வருகிறார்.

பாலிவுட்டில் சூப்பர் எண்ட்ரி: பாலிவுட்டில் இவர் காலடி எடுத்து வைத்ததே ஒரு வரலாற்று சிறப்புமிக்க படத்தில் தான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை மையப்படுத்திய படமான MS Dhoni Untold Story படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். இதில் அவரது காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்தியா முழுவதும் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
சோகத்தில் திஷா பதானி: இவர் கிக் பாக்ஸிங் மற்றும் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்.இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர். சமூக வலைதளங்களில் இவரது நடன வீடியோக்களுக்கு தனி வரவேற்பு உள்ளது. இப்படி இருக்கையில் நடிகை திஷா பதானி அண்மையில் நடைபெற்ற லக்மே ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது, அவரை பத்திரிகையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அப்போது அவர், சிரிக்காமல் போஸ் கொடுத்தார். மேலும் அவர் ஏதோ அசௌகரியமாக இருப்பது போல காணப்பட்டார்.
ரசிகர்கள் கேள்வி: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதும் ரசிகர்கள் பலர் திஷா பதானிக்கு என்ன ஆச்சு? அவர் ஏன் இவ்வளவு அசௌகரியமாக இருக்கிறார்? அவரது மனதை காயப்படுத்தும்படி ஏதாவது நடந்துவிட்டதா? தர்ம சங்கடமானது ஏதாவது நடந்துவிட்டதா? என்று எல்லாம் கேட்டு வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











