3டில திஷா பதானி இட்லி துணியுடன் டான்ஸ் ஆடுது.. குழந்தைகளை கூட்டிட்டு போகணுமா.. கொதிக்கும் பெற்றோர்!

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்துள்ள கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி வெளியானது. படத்தின் முதல் காட்சியிலிருந்து ஏகப்பட்ட ஒய் பிளட் சேம் பிளட் விமர்சனங்கள் தான் வந்துக்கொண்டிருக்கிறது. சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் குடும்பமாக படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு திஷா பதானியின் காட்சிகள் ஆரம்பத்திலேயே உவ்வேக் ரகமாக மாறிவிட்டது.

இந்த ஆண்டு பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்திலும் திஷா பதானி ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்தில் இடம்பெறும் பீச் காட்சியில் கூட மோசமான உடையில் திஷா பதானியை நாக் அஸ்வின் காட்சிப்படுத்தவில்லை.

kanguva disha patani suriya


தீபிகா படுகோனை நிர்வாணமாக நெருப்பில் நடந்து வருவது போல காட்டும் இடத்தில் கூட எங்கேயும் ஆபாசமாக காட்டவில்லை. ஆனால், கங்குவா படத்தில் முதல் பாடலிலேயே 3டியில் திஷா பதானியை காட்டுகின்றனர். அவர் அணிந்து வரும் பிகினி உடையை ஜூம் செய்து காட்டிய நிலையில், குழந்தைகளை முதல் நாளே படத்துக்கு அழைத்துச் சென்ற பெற்றோர்களுக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டதாக சோஷியல் மீடியாவில் பலரும் சூர்யாவையும் சிறுத்தை சிவாவையும் திட்டி வருகின்றனர்.

3டி படம்னாலே: குழந்தைகளை கவர்வதற்காகவே 3d படங்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாவில் 3d படம் வருவதே அரிதான ஒன்று தான். அப்படி வெளியாகியிருக்கும் கங்குவா படம் தமிழர்களின் கலாச்சாரத்தை பேணிக் காக்க வேண்டிய நிலையில், இப்படியா ஆரம்பமே கில்மா படம் போல காட்டுவீர்கள். அந்த பாப்பா திஷா பதானிக்கு நடிக்கவும் தெரியவில்லை. டயலாக்கும் சரியில்லை. வெறும் ஒரு பாட்டுக்கு இட்லி துணியுடன் டான்ஸ் ஆட மட்டுமே கொண்டு வந்தது போல படத்தில் போட்டுருக்காரு டைரக்டர். இன்னமும் ஹீரோயின்களை காட்சிப் பொருளாக காட்டுவதை இயக்குநர்கள் எப்போதுதான் நிறுத்தப் போகிறார்களோ என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரொம்ப ஆபாசம்: குழந்தைகளை கூட்டிக் கொண்டு வந்த படத்தை பார்க்க ஆரம்பித்தால், ஆரம்பத்திலேயே 'யோலோ’ எனும் ஒரு பாடலை போட்டு அதில் மஞ்சள் நிற பிகினி உடையில் திஷா பதானி ரொம்ப ஆபாசமாக நடனம் ஆடுவதை 3டியில் காட்டுகிறார் இயக்குநர் சிறுத்தை சிவா. இளைஞர்கள் அடிக்கும் மோசமான கமெண்ட்டுகளை எல்லாம் குழந்தைகள் கேட்டால் கெட்டுப்போய் விட மாட்டார்களா என்றும் பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கத்தில் பலரும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கொதிக்கும் பெற்றோர்கள்: குடும்பமாக சூர்யா படம் தானே என நம்பி வந்து பார்த்தால் இப்படி ஆபாசமான காட்சிகளை வைத்து குழந்தைகளுடன் படத்தை பார்க்கவே முடியாமல் செய்து விட்டாரே சூர்யா என ஏகப்பட்ட பெற்றோர்கள் கொந்தளித்து திட்டித் தீர்த்து வருகின்றனர். பாலிவுட்டில் இருந்து நடிகைகளை இறக்க காரணமே இதுதான் என்றும் சமீபத்தில் வெளியான ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தில் கூட மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அந்தளவுக்கு ஆபாசமாக நடித்திருந்தார் என்றும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X