தினமும் சண்டை வேண்டாம்: காதலரை பிரிந்த சுந்தர் சி. ஹீரோயின்
மும்பை: தினமும் சண்டை வேண்டாம் என்று காதலர்களான நடிகை திஷா பதானியும், நடிகர் டைகர் ஷ்ராஃபும் பிரிந்துவிட்டார்களாம்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமான திஷா பதானி பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். டைகர் பெரும்பாலும் திஷாவின் வீட்டில் தங்கி வந்தார்.
இருவரும் சேர்ந்து நடித்த பாகி 2 படம் சூப்பர் ஹிட்டானது.

நடனம்
டைகரும் சரி, திஷாவும் சரி உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள். திஷா ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார். இதையடுத்து தனது இடுப்பை அடிக்கடி புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இருவருக்குமே நடனமாடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.

காதலி
தன் காதலி படப்பிடிப்பில் இருந்தால் தன் வீட்டில் இருந்து சாப்பாடு அனுப்பி வைப்பார் டைகர் ஷ்ராஃப். அவர் திஷா மீது காட்டிய பாசத்தை பார்த்து பலரும் வியந்தார்கள். டைகரின் குடும்பத்தாருக்கு முதலில் திஷாவை பிடிக்கவில்லை. பின்னர் ஏற்றுக் கொண்டனர். இருப்பினும் டைகரின் அம்மாவுக்கு திஷாவை பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.

பிரிவு
அண்மை காலமாக டைகரும், திஷாவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டார்களாம். காதல் கசந்து போய் சண்டை மட்டுமே நடந்துள்ளது. இதையடுத்து பிரிவது என்று அவர்கள் முடிவு செய்து ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிட்டார்களாம். பிரிந்துவிட்டாலும் அவர்கள் படங்களில் ஜோடியாக நடிக்கலாம். பாலிவுட்டில் முன்னாள் காதலர்கள் சேர்ந்து நடிப்பது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள்
இனி நண்பர்களாக மட்டும் இருக்க தீர்மானித்துள்ள அவர்கள் சினிமா படங்களில் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்துள்ளார்களாம். திஷா சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் இளவரசியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் சுந்தர் சி. தற்போது சிம்பு படத்தில் பிசியாக உள்ளார். மேலும் அவர் இருட்டு என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு 85 சதவீதம் முடிந்துவிட்டது.


Click it and Unblock the Notifications











