வாரிசு நடிகரை பிரிந்த பிரபல நடிகை: காரணம் அரசியல் வாரிசு?
மும்பை: காதலர்களான பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபும், நடிகை திஷா பதானியும் பிரிந்துவிட்டனர்.
கூல் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அவரும் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராஃபும் காதலித்து வந்தனர். காதலை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. இருப்பினும் இருவரும் ஜோடியாக அடிக்கடி ஊர் சுற்றுவார்கள்.
முக்கியமாக வார இறுதி நாட்களில் மதிய உணவு அல்லது டின்னர் சாப்பிட ஹோட்டலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

திஷா பகானி
திஷா பதானியும், டைகர் ஷ்ராஃபும் பிரிந்துவிட்டார்களாம். இது குறித்து அவர்கள் இருவருக்கும் நெருக்கமான ஒருவர் கூறியதாவது, கடந்த சில வாரங்களாக டைகர், திஷா இடையே பிரச்சனையாக இருந்தது. இதையடுத்து பிரிந்து செல்வது என்று முடிவு எடுத்தார்கள். அவர்கள் தற்போது பிரிந்துவிட்டனர். பிரிவது என்று சில வாரங்களுக்கு முன்பே முடிவு எடுத்துவிட்டனர் என்றார்.

நண்பர்கள்
திஷா பதானி, டைகர் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை பார்த்தவர்கள் அவர்கள் பிரிந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். அதன்படியே நடந்துவிட்டது. இந்த காதல் நீடிக்காது என்பது திஷாவுக்கும், டைகருக்குமே தெரிந்துவிட்டது. அதனால் சேர்ந்து இருந்து மோதிக் கொள்வதை விட பிரிந்து செல்வதே சரி என்று அவர்கள் முடிவு செய்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நபர்
முன்பும் கூட திஷாவும், டைகரும் பிரிந்துவிட்டதாக பேசப்பட்டது. ஆனால் சில நாட்களில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றினார்கள். ஆனால் இம்முறை நிஜமாகவே பிரிந்துவிட்டார்களாம். காதலர்களாக இருப்பதை விட நண்பர்களாக இருப்பதே சிறந்தது என்று நினைக்கிறார்களாம். இந்நிலையில் இந்த காதல் முறிவுக்கு பின் ஒருவர் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அரசியல் வாரிசு
அரசியல் வாரிசு ஒருவருடன் திஷா அண்மையில் வெளியே சென்றார். அதை பார்த்தவர்கள் அவர்களுக்கு இடையே காதல் என்று பேசத் துவங்கினர். இந்நிலையில் டைகர் ஷ்ராஃப், திஷா பிரிய அந்த அரசியல் வாரிசு தான் காரணம் என்று பேசத் துவங்கிவிட்டனர். ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வெளியே சென்றால் அது காதலாக மட்டும் தான் இருக்க முடியுமா, நண்பர்களாகவும் இருக்கலாமே என்கிறார்கள் திஷா பதானியின் ரசிகர்கள். முன்னதாக டைகரின் அம்மாவுக்கு திஷாவை சுத்தமாக பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











