காதலரை பிரிந்த சுந்தர் சி. ஹீரோயின்: காரணம் இளம் நடிகை
மும்பை: பாலிவுட் நடிகை திஷா பதானியும், அவரின் காதலர் டைகர் ஷ்ராபும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தோனி படம் மூலம் பிரபலமான நடிகை திஷா பதானி பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபை காதலித்து வந்தார். இருவரும் காதலை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஜோடியாக ஊர் சுற்றினார்கள்.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார்கள்.

நட்பு
டைகருடன் ஊர் சுற்றினாலும் காதல் பற்றி கேட்டால் திஷா நழுவிவிடுவார். டைகரோ திஷா தன்னுடைய நல்ல நண்பர் என்றார். இந்த நல்ல நண்பர் என்றாலே அது காதல் என்று திரையுலகில் அர்த்தம். இந்நிலையில் திஷாவுக்கும், டைகருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரிவு
ஸ்டூண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் டைகருக்கும், ஹீரோயின் தாரா சுதாரியாவுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துவிட்டதாம். அதனால் திஷா, டைகர் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரியும் அளவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. டைகரை பிரிந்த திஷாவின் வாழ்வில் ஸ்பெஷலான நபர் ஒருவர் வந்துவிட்டாராம்.

தாரா
தாரா தடக் படம் புகழ் நடிகர் இஷான் கட்டாரை காதலிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. நடிக்க வரும் முன்பே தாராவும், இஷானும் காதலித்தார்களாம். ஆனால் நடிக்க வந்த பிறகு அவர்கள் பிரிந்துவிட்டார்களாம். தற்போது சுத்தமாக பேச்சுவார்த்தையே இல்லையாம். இஷானை பிரிந்த பிறகு தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள ரோஹன் மெஹ்ராவை காதலிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் டைகருடன் சேர்ந்து அவர் பெயர் அடிபடுகிறது.

பிடிக்கவில்லை
திஷா பதானியை டைகரின் பெற்றோருக்கு அதிலும் குறிப்பாக அவரின் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று ஆரம்பத்திலேயே பேசப்பட்டது. திஷா டைகரை அவரின் வீட்டிற்கு செல்ல விடாமல் தன் கட்டுப்பாட்டில் தன்னுடைய வீட்டிலேயே தங்க வைப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பாகி 2 விளம்பர நிகழ்ச்சிகளில் டைகருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததை பார்த்து திஷா கோபப்பட்டதாவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











