விவாகரத்தா?: போட்டோ போட்டு பதில் அளித்த ப்ரியங்கா சோப்ரா

By Siva

நியூயார்க்: விவாகரத்து பேச்சு கிளம்பியுள்ள நிலையில் ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் மற்றும் அவர் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், அவரின் கணவர் நிக் ஜோனஸும் விவாகரத்து பெறப் போவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.

ப்ரியங்காவின் மறுமுகம் நிக்கிற்கு தற்போது தான் தெரிய வந்துள்ளது என்று அந்த பத்திரிக்கை தெரிவித்தது.

நிக் தம்பி

விவாகரத்து செய்தி தீயாக பரவிய நிலையில் ப்ரியங்கா நிக் ஜோனஸின் தம்பி பிராங்க்ளினின் பட்டமளிப்பு விழாவுக்கு சென்றிருந்தார். அந்த விழாவுக்கு நிக் செல்லாததால் கணவன், மனைவி இடையே பிரச்சனை என்பதை பலரும் உறுதி செய்துவிட்டனர்.

கணவர்

ஊரெல்லாம் தன்னை பற்றி பேசுவதை அறிந்த ப்ரியங்கா தனது கணவர் மற்றும் அவரின் சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

திருமணமான வேகத்தில் ப்ரியங்கா கணவரை பிரிகிறார் என்பதை அறிந்து அவரின் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் ப்ரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமூக வலைதளம்

திருமணமானதில் இருந்து ப்ரியங்கா தனது கணவருடன் எங்காவது சுற்றுலா சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் இப்படி அடிக்கடி ஊர் சுற்ற, பார்ட்டிக்கு செல்ல ஆர்வமாக இருப்பது தான் நிக்கிற்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X