»   »  ஆச்சரிய திவ்யா!

ஆச்சரிய திவ்யா!

Subscribe to Oneindia Tamil
முதல் படத்திலேயே ரசிகர்களை அசத்தி விட்டார் ஆச்சார்யா திவ்யா.

விக்னேஷ் ரொம்ப நாட்களுக்குப் பிறகு நடித்து வெளியாகியுள்ள படம் ஆச்சார்யா.

வித்தியாசமான திரைக் கதையின் பின்னணியில் வெளியாகியுள்ள ஆச்சார்யாவில்,விக்னேஷுடன் ஜோடி போட்டிருப்பவர் பளிச்சென இருக்கும் திவ்யா.

அம்மணியை புதுமுகம் என்று கூற முடியாது. காரணம் சின்னப் புள்ளையாகஇருந்தபோதே நடிக்க வந்து விட்டார். அதாவது பொறந்த 6வது மாதத்திலேயே நடிக்கவந்து விட்டார். பச்சைப் புள்ளையாக இருந்தபோது அவர் நடித்த முதல் படம்பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.

அதில் பானுப்பிரியாவின் மகளாக வந்து குவா குவா என்று அழுது நடித்தார். வயசுக்குவந்த பிறகு புன்னகைதேசம் படத்தில் வடிவுக்கரசியின் மகளாக வந்து போனார்.இப்போது வாளிப்பான தோற்றத்தை அடைந்த பிறகு ஆச்சார்யாவில்நாயகியாகியுள்ளார்.

நல்ல புரோமஷன்தான் என்றோம் திவ்யாவைப் பார்த்தபோது.

தேங்க்யூ. இந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு கொஞ்சம் கூட நெர்வஸ்ஸாகவேஇல்லை. காரணம் அத்தனை பேரும் என்னிடம் அத்தனை அன்பாக பழகினார்கள்.

குறிப்பாக இயக்குநர் ரவி சார் மிக அருமையாக எனக்கு வசனங்களை சொல்லிக்கொடுத்தார், காட்சிகளை விளக்கினார். ரொம்ப உதவியாக இருந்தார்.

எனக்கு சினிமா புதிதல்ல. சின்னப் பிள்ளையாக இருந்தபோதே நடிக்க வந்துவிட்டேன். சின்னக் கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர், ஆடி விரதம்,புன்னகைதேசம் என கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாகநடித்த அனுபவம் உள்ளது.

தமிழ் தவிர மலையாளம், தெலுங்கிலும் நடித்துள்ளேன்.

ஆச்சார்யாவில் போலீஸ் கேரக்டரில் நடித்தபோது அதை எப்படிச் செய்வது என்பதில்பயம் இருந்தது. ஆனாலும் அந்த டிரஸ்ஸைப் போட்டவுடன் ஒரு கம்பீர உணர்வுமனதுக்குள் வந்தது.

அந்த தெம்பில்தான் கேரக்டரை சரியாக செய்ய முடிந்தது என்கிறார் திவ்யா.ஆச்சார்யாவில் திவ்யாவின் நடிப்பைப் பார்த்துப் பாராட்டிய பல தயாரிப்பாளர்கள்தங்களது படங்களில் நடிக்க இன்வைட் செய்கிறார்களாம்.

இருப்பினும் இப்போதைக்கு தமிழில் ஒரு படத்தையும், மலையாளத்தில் டைம் என்றபடத்தையும் மட்டும் திவ்யா பேபி ஒத்துக் கொண்டிருக்கிறதாம்.

திவ்யாவுக்கு கண்டபடி கிளாமர் காட்டுவதில் உடன்பாடில்லையாம். ஆச்சார்யாவில்கூட தனக்கு டூயட் பாட்டு இல்லை என்று இயக்குநர் சொன்னபோதுசந்தோஷப்பட்டாராம்.

டூயட் இருந்தால் எப்படியாவது கவர்ச்சி காட்ட வேண்டி வருமே என்று பயந்தபடிஇருந்தாராம். நல்லவேளை அப்படி ஏதும் நடக்காமல் தப்பித்து விட்டாராம்.

இப்படியே ரொம்ப நாளைக்குத் தப்ப முடியாதம்மா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil