'பிடாரி' வேடத்தில் திவ்யா!
| Click here for more images |
தமிழ் சினிமாவில் ஆண்டி ஹீரோயிசத்திற்கு செமத்தியான வரவேற்பு கிடைக்கும். வில்லத்தனத்தின் மூலம்தான் சத்யராஜ் ரசிகர்களைக் கவர்ந்தார். ரஜினி கூட ஆரம்பத்தில் வில்லனாகத்தான் வெளுத்துக் கட்டினார்.
நாயகர்களுக்கு மட்டுமே இப்படிப்பட்ட சவாலான கேரக்டர்கள் கிடைப்பது வழக்கம். ஆனால் சில நேரங்களில் நாயகிகளுக்கும் கூட இப்படிப்பட்ட கேரக்டர்கள் அமைந்து விடும்.
ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பாவில் கிடைத்த நீலாம்பரி வேடம் அவரது தொய்ந்து போன மார்க்கெட்டை அப்படியே தூக்கி நிறுத்த உதவியது.
அதேபோல, உயிர் படத்தில் சங்கீதா போட்ட காமக் கொடூர அண்ணி கேரக்டர் அவருக்கு சரியான பெயரை வாங்கிக் கொடுத்தது.
இந்த வரிசையில் சேர வருகிறார் திவ்யா. தூண்டில் படத்தில் கிட்டத்தட்ட இப்படிப்பட்ட வில்லத்தனமான கேரக்டரில்தான் அவர் நடித்துள்ளாராம்.
ஷாம் நாயகனாக நடித்துள்ள தூண்டில் படத்தில் நாயகி சந்தியா. திவ்யாவும் ஒரு நாயகி என்றாலும் கூட அவரது கேரக்டர் கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரியைப் போலவாம்.
அட்டகாசமாக நடிக்கும் வாய்ப்புடைய இந்த கேர்கடரில் கிளப்பியுள்ளாராம் திவ்யா. அதேபோல கிளாமரிலும் தூள் பறத்தியுள்ளாராம். உண்மையான ஹீரோயினான சந்தியாவை விட திவ்யாவுக்கே நடிப்பில் ஸ்கோப் அதிகமாம்.
இந்தப் படம் வந்தால் எனது முழு நடிப்புத் திறமையையும் அனைவரும் உணர்வார்கள் என்கிறார் திவ்யா நம்பிக்கையுடன்.


Click it and Unblock the Notifications











