விஜய், திரிஷா விவகாரம்.. அது அவங்க பெர்சனல்.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் ஓபன்

சென்னை: விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக திருமணத்துக்கு வந்ததுதான் சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. சங்கீதா விவாகரத்து கொடுத்திருக்கும் இந்த நேரத்தில் இதெல்லாம் தேவைதானா என அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கூறிவருகிறார்கள். அதேசமயம் இரண்டு பேரும் நட்பாகக்கூட வந்திருக்கலாமே என்றும் பேசுவதற்கு தவறவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷிடம் விஜய் விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ரொம்பவே டீசன்ட்டான பதிலை சொல்லியிருக்கிறார்.

விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் அவர், 'விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஷேர் செய்தார். அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்தி கொடுத்தது. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. எனது கணவர் மூலம் நெருக்கடி வந்தால் அந்த நடிகையின் பெயரையும் சொல்வேன்; அவரை இரண்டாவது எதிர் மனுதாரராக சேர்ப்பேன்' என தெரிவித்திருந்தார்.

Divya Ganesh Reacts to Vijay Trisha Wedding Appearance Calls It a Personal Matter
Photo Credit:

யார் அந்த நடிகை?: சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்ட அந்த நடிகை யார் என்று பலரும் தேடினார்கள். விஜய்யுடன் லிஃப்ட்டில் இருப்பது போன்றும், வெளிநாட்டில் இருப்பது போன்றும் திரிஷாதான் சில புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுவந்தார். எனவே சங்கீதா சொல்லும் அந்த நடிகை திரிஷாவாக இருக்குமோ என அனைவருமே சந்தேகித்தார்கள். ஆனால் இதுகுறித்து விஜய்யோ, திரிஷாவோ எதுவுமே வாய் திறக்காமல் சைலெண்ட் மோடுக்கு சென்றார்கள்.

ஜோடியாக வந்த விஜய் - திரிஷா: நிலைமை இப்படி இருக்க அனைவரும் சந்தேகிக்கும் திரிஷாவுடன் ஒரே கலர் டோனில் உடை அணிந்தபடி ஒன்றாக; தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்துக்கு நேற்று முன்தினம் வந்தார்கள். மேடைக்கு ஒன்றாகவே சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு; ஜோடியாக ஃபோட்டோவுக்கு போஸும் கொடுத்தார்கள். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி திரிஷாவுடன் வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

விளாசும் ரசிகர்கள்: விஜய் அவ்வாறு செய்தது அவருக்கே பேக் ஃபயர் ஆகியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு முழு ஆதரவை கொடுத்து வந்த அவரது ரசிகர்களும், தொண்டர்களும்கூட இவ்விஷயத்தில் அவருக்கு அரணாக நிற்க முடியாமல் தவிக்கிறார்கள். மேலும் சிலரோ விஜய்க்கு அரசியலில் கொடுத்த ஆதரவு நிலைப்பாட்டையே மாற்றிக்கொள்ளும் மனநிலைமைக்கு சென்றுவிட்டார்கள். இந்நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் இந்த விவகாரம் பற்றி பேசியிருக்கிறார்.

திவ்யா பேசியது: அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அது ஒரு திருமணம். திருமணம் என்றால் ஆயிரம், இரண்டாயிரம் பேர் வரத்தான் செய்வார்கள். தெரிந்த இரண்டு பேர் வந்தால் ஹாய் சொல்லி சேர்ந்து போவார்கள்தானே. அப்படித்தான் இதுவும். அதுவும் மீறி அதெல்லாம் அவர்கள் பெர்சனல். ஒரு பெர்சனலுக்குள் ரொம்பவே ஆழமாக போவது நல்ல விஷயங்கள் இல்லை என்றுதான் சொல்வேன். வேலை வேறு, பெர்சனல் வேறு. அவர்கள் இருக்கும் துறையை வைத்துக்கொண்டு அவர்களை எதுவும் சொல்லிவிட முடியாது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X