அஜீத் மேல ஆசை... - திவ்யா

By Staff

Ramya
வாயைத் திறந்தாலே அஜீத் புராணமாகப் பாடுகிறார் திவ்யா ஸ்பந்தனா... அதாவது குத்து ரம்யா.

என்ன காரணமோ...

"அவர் நடிச்ச ஆசை படம் பார்த்ததிலிருந்தே நான் அவரோட தீவிர ரசிகையாகிவிட்டேன். நான் தமிழ் சினிமாவில நடிக்க ஆரம்பிச்சதும் எப்படியாவது அஜீத் கூட ஒரு படத்திலாவது நடிக்கணும் என்கிற ஆசை அதிகமாயிடுச்சி. அவரோட ஸ்டைல் (?), அழகு, நடிப்புத் திறமை... ஹைய்யோ.. இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம்.

அவரோட பெருந்தன்மை, தாராள மனசு பத்தியெல்லாம் பிற நடிகர் நடிகைகள் சொல்லக் கேட்டுள்ளேன். ஒரே ஒரு முறை அவர் கூட நடிச்சா போதும்..." என்கிறார் மூச்சுவிடாமல்.

அப்படியே, கன்னட படவுலகம் பற்றி கேட்டதற்கு அவர் சொன்ன அதிரடி பதிலையும் படியுங்கள்..

"கன்னடப் படங்கள் வேஸ்ட்... 10 கன்னடப் படங்கள் வந்தால் அவற்றில் 7 அல்லது 8 படங்கள் ரீமேக்தான். குறிப்பாக தமிழிலிருந்து அவை ரீமேக் செய்யப்படுகின்றன. நல்ல கிரியேட்டர்களும் இல்லை, அவர்களை உற்சாகப்படுத்த ராஜ்குமார், விஷ்ணுவர்தன் போன்றவர்களும் இல்லை. இந்த நிலை மாறுமான்னும் தெரியலை..." என்கிறார்.

பரபரப்பாக செய்திகளில் வாழும் கலை தெரிந்தவர் திவ்யா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X