துடிக்கும் திவ்யா!
தேனடை மாதிரி இருக்கும் திவ்யா, ஆச்சார்யாவில் விக்னேஷுக்கு ஜோடிபோட்டுள்ளார். அம்மணி ஃபீல்டுக்குப் புதியவர் இல்லையாம். கிட்டத்தட்ட 17 வருஷசர்வீஸ் இருக்காம். அதுக்காக வயதை குண்டக்க மண்டக்க கற்பனை செய்து விடவேண்டாம்.
ஆனால், குழந்தையாகவே 40 படங்களை தாண்டியுள்ளார் திவ்யா.
ஆச்சார்யாவில் அருமையான கேரக்டராம் திவ்யாவுக்கு. பாவாடை, தாவணியில் படம்முழுக்க வந்து போகிறேன். நடிப்பில் அசத்தியிருக்கிறேன், நல்ல ஒசத்தியானநடிப்புதான் என்று தன்னைத்தானே தட்டிக் கொள்கிறார்.
திவ்யா மனதில் பேராசை ஒன்று இருக்கிறதாம். அசின் மாதிரி, திரிஷா மாதிரி,நயனதாரா மாதிர கிளாமரில், ஆட்டம், பாட்டம், நடிப்பில் கலக்க வேண்டும்என்பதுதான் திவ்யாவின் ஆசை.
ஆனால் ஆச்சார்யாவில் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை.
ஆச்சார்யா படம் முடிவதற்குள்ளாகவே திவ்யாவின் கையில் இரண்டு படம் வந்துகுந்தியிருக்கிறதாம். ஆச்சார்யாவை முடித்து விட்டு இந்த படங்களில் புகுந்துவிளையாடப் போகிறாராம் திவ்.


Click it and Unblock the Notifications