நைட் கிளப்ல செம பார்ட்டி போல.. ஜி.வி. பிரகாஷ் கிங்ஸ்டன் பட ஹீரோயின் என்னம்மா டான்ஸ் ஆடுறாங்க!
சென்னை: ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை திவ்யபாரதி. தனது 33வது பிறந்தநாளை நேற்று நைட் கிளப் ஒன்றில் கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் பார்ட்டி பண்ணி கொண்டாடிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
முப்பரிமாணம் படத்தில் தோழி கதாபாத்திரத்தில் சின்ன ரோலில் அறிமுகமான கோவையை சேர்ந்த திவ்ய பாரதி பேச்சுலர் படத்தின் மூலமே ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார். ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கும் கிங்ஸ்டன் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

அதற்குள் இவருக்கு 33 வயதாகி விட்டதா என ரசிகர்கள் ஷாக் ஆகி வரும் நிலையில், ஆரஞ்சு நிற உடையில் நைட் பார்ட்டியில் கேக் வெட்டி ஆட்டம் போட்ட வீடியோக்களை ஷேர் செய்து லைக்குகளையும் பிறந்தநாள் வாழ்த்துகளையும் அள்ளி வருகிறார்.
நடிகை திவ்யபாரதி பிறந்தநாள்: கோவையில் 1992ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்த நடிகை திவ்யபாரதி பன்னாரி அம்மன் கல்லூரியில் பிடெக் படிப்பை எல்லாம் முடித்துவிட்டு மாடலிங் துறையில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாக அழகிப்போட்டிகளில் பங்கேற்றார். கோயம்பத்தூரின் இளவரசி பட்டத்தை எல்லாம் வென்ற திவ்யபாரதிக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புக் கிடைக்க தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
மகாராஜா மனைவி: மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக குட்டி ரோலில் நடித்திருந்தார். அதன் பின்னர் தெலுங்கில் வெளியான கோட் படத்திலும் நடித்துள்ளார். சேரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஜர்னி வெப்சீரிஸிலும் இவரது நடிப்பு பலரையும் கவனிக்க வைத்தது. விரைவில் ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து இவர் நடித்துள்ள கிங்ஸ்டன் படம் வெளியாகிறது. நேற்று வெளியான கிங்ஸ்டன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "ராசா ராசா" பாடலும் இளைஞர்களை கவர்ந்து டிரெண்டாகி வருகிறது.
பர்த்டே பார்ட்டி: ஃபேண்டா பாட்டில் என தன்னை கல்லூரியில் சிலர் ஓவியம் வரைந்து கிண்டல் செய்ததாக ஆரம்பத்தில் பேட்டி ஒன்றில் பேசி புலம்பியிருந்தார் திவ்யபாரதி. ஆனால், தற்போது ஆரஞ்சு நிற உடையில் அவரது உடல் அமைப்பை பார்த்த ரசிகர்கள் அதே கமெண்ட்டை போட்டு அவரை வர்ணித்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு நைட் கிளப் ஒன்றில் அவர் நடத்திய பர்த்டே பார்ட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன.
ஏஞ்சல் போல தலையில் லைட் வைத்து: திவ்யபாரதி சும்மாவே ஏஞ்சல் போலத்தான் இருப்பார். பிகினி உடைகளில் எல்லாம் செம போல்டாக போஸ் கொடுத்து அவர் போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில், நேற்று நடைபெற்ற பர்த்டே பார்ட்டியில் தலை லைட்டை க்ரீடம் போல வைத்துக் கொண்டு ரியல் ஏஞ்சல் போலவே மாறிவிட்டார். அதற்குள் உங்களுக்கு 33 வயதாகி விட்டதா நம்பவே முடியலை என ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து வெற்றியை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











