ஹீரோயின் மெட்டீரியல் என மீண்டும் நிரூபித்த டிடி.. வாழ்வின் எல்லை வரைக்கும் வேண்டுமாம்.. வீடியோ

சென்னை: தொலைக்காட்சி தொகுப்பாளினியான தனது கெரியரை தொடங்கிய டிடி என்கிற திவ்யதர்ஷினி நீலகண்டன், தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஒரு அடையாளமாக உள்ளார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதுவும் அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஆனாலும் சமீபகாலமாக டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், சில விருது நிகழ்ச்சிகள்\, அரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

டிடி ஒரு தொலைக்காட்சி பிரபலம் மட்டும் கிடையாது, ஆனால் அவர் தொலைக்காட்சி வட்டாரத்திற்குள்ளே நீண்ட நாட்கள் இருந்துவிட்டார். அவர் சினிமாக்களில் முன்னரே நடிக்கத் தொடங்கி இருக்க வேண்டும் என்று செல்லமாக டிடி மீது கோபப்படும் அவரது ரசிகர்களை பார்க்க முடிகிறது.

Divyadarshini Neelakandan Proves Her Heroine Material Charm Again Graceful Dance to Snehithane from Alaipayuthey Wins Fans Hearts

டிடி-க்கும் சினிமாவில் நடிக்கும் ஆசைகள் இருந்தாலும் அவர் மிகவும் தாமதமாகவே தனது கெரியரை தொடங்கினார். அஜித்தின் வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு வந்த போது அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தால் அவரால் நடிக்க முடியாமல் போனதை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு மிகவும் வருந்தினார்.

பெரியார்: டிடி ஒரு செலிபிரிட்டியாக மட்டுமல்லாமல் தைரியமான, தன்னம்பிக்கையான பெண்ணாவும் பலருக்கும் உத்வேகம் அளிப்பவராக உள்ளார். தான் தன்னம்பிக்கையுடன் வாழ காரணமே பெரியாரின் முற்போக்கு கருத்துக்கள் தான் என்று தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறியவர்.

நம்பிக்கை: மேலும் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பேட்டிகளில் தொடர்ந்து தன்னை பின்தொடர்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். அப்படி இருக்கையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Divyadarshini Neelakandan Proves Her Heroine Material Charm Again Graceful Dance to Snehithane from Alaipayuthey Wins Fans Hearts

டான்ஸ் வீடியோ: அதாவது டிடி தங்க நிற பட்டுப்புடவை அணிந்து கொண்டு, அலைபாயுதே படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான சினேகிதனே என்ற பாடலுக்கு அழகாக எக்ஸ்பிரஷன்களை வெளிப்படுத்தி உள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் பலரும் அழகாக உள்ளது என்று பதிவிட்டு வருகிறார்கள். ஒரு நெட்டிசனோ, படையப்பா படத்தில் நீலம்பரிக்கு இரண்டாம் பாதியில் ஒரு மெலடி பாடல் கொடுத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X