»   »  காதல் என்றால் தியா!

காதல் என்றால் தியா!

Subscribe to Oneindia Tamil

காதல் என்றால் என்ன என்று பெயர் மாற்றம் பெற்றுள்ள செவன் படத்தில், தியாவின்நடிப்பும், கிளாமரும் தீயாக வந்திருக்கிறதாம்.

சென்னைப் பெண்ணான தியா, ஆரம்பத்திலிருந்தே ஊசலாட்டமான மார்க்கெட்டுடன்அல்லாடிக் கொண்டிருந்தார். கிளாமர் காட்டியும் வாய்ப்பு வரவில்லை, இழுத்துப்போர்த்தி அம்சமாக நடித்தும் யாரும் சீண்டவில்லை.

பொறுத்துப் பார்த்த தியா பொங்கிப் போய் இப்போது கல்யாணத்துக்கு பச்சைக் கொடிகாட்டி விட்டார். கூடிய சீக்கிரமே கல்யாணம் வரப் போவதால் கையில் வைத்துள்ளஅத்தனை படங்களையும் வேகம் வேகமாக நடித்துக் கொடுத்து வருகிறார்.

அதில் செவன் படத்தில் தியாவின் நடிப்பும், கிளாமரும் ரொம்பவே பேசப்படும்என்கிறார் அப்படத்தின் இயக்குநரான காளிமுத்து. அப்படி என்னதான்செய்திருக்கிறாரய்யா காளிமுத்தய்யா என்றோம்.

உட்கார வைத்து உபதேசம் செய்வது போல பேசுகிறார் காளிமுத்து. படத்தின்கதைப்படி இளம் புயல் தியா மீது 40 வயதைத் தாண்டிய சரண்ராஜுக்கு தீராக் காதல்.ஆனால் தியாவின் மனதிலோ இன்னொருவர் மீது மாறாக் காதல்.

சரண்ராஜின் காதலை நிராகரிக்கிறார் தியா. ஆனால் சரண்ராஜோ, தியாவைக் கட்டாயக்கல்யாணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். கடைசியில் யாருடைய காதல் என்னஆனது, எப்படி ஆகிறார்கள் என்பதுதான் கதை என்றார்.

இதில் புதுசா ஒண்ணுமே இல்லையே, ஏகப்பட்ட படங்களில் பார்த்ததுதானே என்றுகாளிமுத்துவை நோக்கி கொக்கிப் பார்வையைப் போட்டபோது, கண்டிப்பாககதையில் வித்தியாசம் இல்லை. ஆனால் நடித்துள்ள தியாவைப் பார்த்து மிரண்டுபோய் விடுவீர்கள் என்று புதிர் போடுகிறார்.

அந்த அளவுக்கு நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறாராம் தியா. அத்தோடு, கிளாமரிலும்இதுவரை இல்லாத அளவுக்கு எல்லையில்லாமல் எகிறியிருக்கிறாராம்.

இந்தப் படம் வரட்டும், அடடா, தியாவை போல ஒரு நடிகையை இழந்து விட்டோமேஎன்று எல்லோரும் புலம்பப் போகிறார்கள் பாருங்கள் என்று காளிமுத்துகவலைப்படுகிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் பரதநாட்டியக் கலைஞராகஇதில் நடித்துள்ளாராம் தியா. நிஜமாலுமே பரதநாட்டியம் கற்ற கலைஞர்தான் தியா.இப்படத்தில் தனக்குப் பிடித்த கேரக்டர் கிடைத்ததால், படு இன்வால்வ்ட் ஆக நடித்துக்கொடுத்துள்ளாராம்.

பீல்டை விட்டுப் போகும் போது, வட்டியும் முதலுமாக கவர்ச்சியில் திளைக்க வைத்துநடித்துக் கொடுத்திருக்கிறார் தியா. கவலைப்படாதீங்க, இன்னொரு தியா வராமலாபோய் விடுவார்!

Please Wait while comments are loading...