»   »  திகு திகு தியா!

திகு திகு தியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தியா புது வீச்சில் தமிழில் ஒரு புதுப் படத்தில் நடிக்கவுள்ளார். படம் முழுக்க கிளாமர்களேபரமாக இருக்கப் போகிறதாம்.

கிளாமரை தலாகப் போட்டுத்தான் தமிழ் சினிமாவுக்கே வந்தார் தியா. நல்லபடியாகஎக்ஸ்போஸ் செய்தும் அவரால் தேற முடியவில்லை. நிறையப் படங்களில் நடித்துகிளாமர் நாயகியாக கோலோச்சலாம் என்று நினைத்த தியாவின் நினைப்பில் மண்ணைஅள்ளிப் போடும் விதமாக அவர் நடித்த ஒரு படம் உருப்படியாக ஓடவில்லை.

சரி குத்து விளக்காக மாறலாம் என்று நினைத்து சில படங்களில் நடித்தும் பார்த்தார்.அயகோ, அவையும் போணியாகவில்லை. இதனால் கடுப்பான தியா, பேசாமல்மலையாளத்தில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க முடிவு செய்து அந்தப்பக்கம் போனார்.

அங்கும் கூட பெரிய அளவில் வரவேற்பில்லை.

இதனால் அப்செட் ஆகியிருந்த தியாவுக்கு இப்போது தமிழில் ஒரு படம் வந்துள்ளது.படத்திற்குப் பெயர் செவன். சிந்து துலானியை வைத்து அலையடிக்குது என்ற கிளாமர்களியாட்டப் படத்தைக் கொடுத்த அதே காளிமுத்துதான், செவனையும் இயக்கப்போகிறார்.

அதென்னவோ காளிமுத்துவுக்கு கிளாமரான படங்களை மட்டும்தான் இயக்கத்தெரியும் போல. சிந்து துலானியை உரித்துக் காட்டி படம் எடுத்த காளிமுத்துஇப்போது நமீதாவை முழுக்க முழுக்க கிளாமர் நாயகியாகப் போட்டு இன்னொருபடத்தை இயக்கப் போகிறார்.

அதைத் தொடர்ந்து தியாவின் தீயான கவர்ச்சியில் செவன் படத்தையும் இயக்கப்போகிறார். பேசாமல் தனது பெயரை கிளாமர் முத்து என இவர் மாற்றிக் கொள்ளளாம்.

சரி முத்துவை விடுவோம், தியாவுக்கு வருவோம். இப்படத்தில் கிளாமர்தான்முக்கியமாக இருக்கும் என்று கூறித்தான் தியாவை புக் செய்தார்களாம். அவரும்ஓ.கே. சொல்லி விட்டாராம்.

படத்தின் முதல் காட்சி முதல் முடியும் வரை தியாவின் கவர்ச்சியில் முத்துக்குளித்துள்ளதாம் கதை. படத்தோட கதை என்னவென்றால், அழகான ஒரு பெண்காவல் நிலையம் வருகிறாள். தன்னை சில ரவுடிகள் துரத்துவதாகவும்,காப்பாற்றுமாறும் கோருகிறாள்.

காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரோ, தன்னை நாடி வந்த பெண்ணின்அழகில் மயங்கி சொக்கிப் போகிறார். நீ என்னைக் கல்யாணம் செய்து கொள் என்றுவற்புறுத்துகிறார்.

என்னடா இது குரங்கு பிடிக்க பிள்ளையார் ஆன கதையாக இருக்கிறதே என்றுஅங்கிருந்து தப்பி ஓடுகிறாள் அந்த அழகுப் பெண். காவல் அதிகாரி துரத்துகிறார்.ஹீரோ புகுந்து ஹீரோயினைக் காப்பாற்றுகிறார்.

அப்படியே போகிறதாம் கதை. சதைப் பிடிப்பான இந்தக் கதையை படமாக்கும்போதுகிளாமர் இல்லாமல் எடுக்க முடியுமோ? அதனால் தான் படத்தை முழுக்க முழுக்ககிளாமராக உருவாக்குகிறாராம் காளிமுத்து. தியாவும் முடிந்தவரை கிளாமர் காட்டரெடியாக இருக்கிறாராம்.

இந்தப் படமாவது தியாவுக்கு திருப்பம் தருமா என்று பார்ப்போம்!

Read more about: diya in new film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil