»   »  பேஷன் டிவி தியா!

பேஷன் டிவி தியா!

Subscribe to Oneindia Tamil

தியா கொஞ்ச நாட்களாக பேஷன் (எப்) டிவியை படு தீவிரமாக பார்க்கத்தொடங்கியுள்ளாராம். எல்லாம் செவன் படத்தின் இயக்குனர் போட்ட உத்தரவு தான்காரணமாம்.

எப்.டிவியை பெரும்பாலும் விரும்பிப் பார்ப்பவர்கள் ஆம்பளைஸ்தான். அதிலும்குறிப்பாக ராத்திரி நேரத்து கவர்ச்சி அணிவகுப்பை ஜொள்ளு வடிய, விடியவிடியபார்ப்பவர்களும் பெரும்பாலும் அவங்க மட்டுந்தேன்!அப்படிப்பட்ட எப். டிவியை தியா விடிய விடிய பார்க்க என்ன காரணம்? செவன்என்ற படத்தில் 7 விதமான கெட்டப்களில் நடிக்கவிருக்கிறாராம் தியா.

இதில், மாடல் அழகி வேடத்தில் இந்தப் படம் முழுக்க வந்து கலக்கப் போகிறார் தியா.

அதற்காகத் தான் பேஷன் டிவி உள்ளிட்ட அந்த மாதிரி டிவிக்களை மெனக்கெட்டுபார்த்து வருகிறாராம்.

ஆடைகளின் டிசைன்கள், கேட்வாக் உள்ளிட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்ள இந்தநிகழ்ச்சிகளை பார்க்குமாறு செவன் பட இயக்குனர் உத்தரவு போட்டதால் அதைஅப்படியே பின்பற்றி வருகிறார் தியா.

இந்த இயக்குனரின் முதல் படமான அலையடிக்குதே படத்தில் தான் சிந்து துலானிவரலாறு காணாத கவர்ச்சியை வாரி வழங்கி அமர்க்களப்படுத்தினார்.

அதே இயக்குனர்தான் இப்போது தியாவை தித்திக்கும் வகையில் ரசிகர்களுக்குகாட்டப் போகிறார். தியா கையில் இப்போது பெரிய அளவில் படங்கள் இல்லை.

இதனால் செவன் படத்தில் தனது முழுத் திறமையையும் அவிழ்த்து விடத்திட்டமிட்டுள்ளார்.

Read more about: diya to star in seven
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil