»   »  தியாவுக்கு ஆப்பு வைத்த சதா

தியாவுக்கு ஆப்பு வைத்த சதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தியாவுக்கு வந்த வாய்ப்பை தடுத்து, தட்டிப் பறித்து அவரது வயிற்றெச்சலை வாங்கிக் கொட்டிக் கொண்டுள்ளார் சதா.

ஜெயம் படம் ஏதோ ஓடி விட்டதால் உச்சாணிக் கொம்பின் மீது ஏறி உட்கார்ந்து கொண்ட சதா அநியாயத்திற்கு சதாய்த்து வருகிறார். அவர் சொன்னபடிதான் இயக்குனர் கேட்க வேண்டும் என்று கூறி பல கண்டிஷன்களை போட்டுத் தள்ளி வந்தார்.

ஆனால், அந்நியனில் அவரது பாச்சா பலிக்கவில்லை. ஷங்கர் கொடுத்த சூட்டில் சர்வமும் அடங்கிப் போய், சொல் பேச்சு கேட்டு ஒழுங்காக நடித்து வந்தார்.அந்நியன் சூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இப்போது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளார் சதா. மாதவனுடன் ஜோடியாக ப்ரியசகியில் நடித்து வரும் சதா, தனது பழைய கண்டிஷன்களை தூசி தட்டி எடுத்துள்ளார்.

அந்த கண்டிசன் லிஸ்ட்டை இயக்குனரிடம் கொடுத்து இம்சிக்க ஆரம்பித்துள்ளார்.

ப்ரியசகியில் நான் எக்ஸ்போஸ் பண்ணி நடிக்க மாட்டேன் என்று சதம் அடம் பிடித்ததால், படத்தை ஓட்ட வேண்டுமே என்ற கவலையில் கவர்ச்சிக்காக தியாவை புக் செய்ய பிளான் போட்டுள்ளார் இயக்குனர். ஆனால், அந்தப் பிளானில் மண்ணைப் போட்டு விட்டாராம் சதா.

படத்தில் தியாவைப் போட்டால் நான் விலகிக் கொள்கிறேன் என்று இயக்குனருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன அவர் ஏம்மா, இப்படிச் சொல்றீங்க என்று கேட்டுள்ளார்.

கேள்வியெல்லாம் கேக்கப்படாது, தியா வேண்டான்னா, வேண்டாந்தான் என்று கூலாக கூறிவிட்டாராம் சதா.


ஆனால் இதற்கு ஒரு பின்னணிக் கதை இருக்கிறதாம். தெலுங்குப் படம் ஒன்றில் சதாவும், தியாவும் சேர்ந்து நடித்துள்ளார்கள். அதில் சதாவை விட கவர்ச்சியில் களேபரம் பண்ணிவிட்டார் தியா. அந்தப் படம் ஓடியதே தியாவின் தித்திக்கும் கவர்ச்சிக்கும், உடல் உழைப்புக்காகவும் (?) தானாம்.

அதிலிருந்து தியா என்றாலே சதாவுக்கு காப்ராதானாம்.

அதே நிலை மீண்டும் வர விடுவாரா? அதனால்தான் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்.மாதவனுக்கு ஹீரோயின் கிடைப்பதே குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில் வந்த சதாவையும் துரத்தி விட மனமில்லாததால், தியாவைப் போடும் எண்ணத்தை அப்படியே துடைத்து தூர எறிந்து விட்டார்களாம்.

விஷயம் தெரிந்து தியா சாமியாடிக் கொண்டிருக்கிறார். சதாவை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.


ட்ரீம்ஸ் படத்தின் தோல்வியால் தியாவின் கனவுகள் எல்லாம் சின்னாபின்னாவாகிவிட்டன. இப்போது அவர் நம்பியுள்ள ஒரே படம் கற்க கசடற தான். அதில் லட்சுமி ராய்க்கும் தியாவுக்கும் இடையே கடும் கவர்ச்சி சடுகுடு நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே சதாவுக்கு ஆப்பு வைக்கும் வகையில் அவர் கன்னடத்தில் ஷர்மிலி லெவலுக்கு நடித்த மோனலிசா என்ற படம் வேக, வேகமாக டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. அந்நியன் படத்தையொட்டி இதையும் தமிழில் களத்தில் இறக்கிவிட இருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil