»   »  தியாவின் நெருக்கம்

தியாவின் நெருக்கம்

Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் திடீரென நிருபர்களைச் சந்தித்தார் தியா. உங்களால் நான்.. குறும்பு தியாவின் பிரஸ் மீட் என்று பேக்கிரவுண்டில்பேனர் எல்லாம் கட்டி ஒரு அரசியல் கட்சியின் பிரஸ் மீட் போல நிருபர்களை சந்தித்தார்.

இரு பக்கமும் தந்தையும் தாயாரும் அமர்ந்து கொள்ள நிருபர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார்.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட தியா குறும்பு படம் மூலம் ரசிகர்களின் மனதில் சின்னதாக இடம் பிடித்தார். தனது கவர்ச்சித்தீயால் ரசிகர்களின் மனதில் அனலை மூட்டினார். தொடர்ந்து ட்ரீம்ஸ் படத்தில் நடித்த தியா, அதன் பிறகு ஆளைக் காணவில்லை.

கற்ககசடற படத்தில் விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்துடன் சேர்ந்து கவர்ச்சியில் கலக்கி எடுத்த தியா, அடுத்து பார்த்திபனுடன்கர்த்தா, நந்தாவுடன் கோடம்பாக்கம், மலையாள நடிகர் பிருதிவிராஜுடன் மின்னல் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

ஆனால், தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகள் பற்றித் தான் அதிகமாக படமும் செய்திகளும்போடுகிறார்களே தவிர தன்னைக் கண்டு கொள்ள மாட்டேன் (உதாரணமாக கற்ககடறவில் லட்சுமி ராயைத் தான் தூக்கி வைத்துசெய்திகள் வந்தன, தியா கவனிக்கப்படவில்லை) என்கிறார்கள் என்று சமீபகாலமாகப் புலம்பி வந்த தியா, திடீரென நிருபர்கள்சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அந்த பிரஸ்மீட்டில் மனம் திறந்து பேசினார். அவர் கூறுகையில்,

முதல் படமான குறும்பில் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாகத்தான் நடித்தேன். காரணம் அது எனக்கு முதல் படம். பிரேக் கிடைக்கவேண்டும் என்பதற்காக அப்படி நடிக்கக் கூறினார்கள். மேலும், அப்போது சினிமா குறித்து எனக்கு எதுவும் தெரியாது.எனவேதான் கவர்ச்சியாக நடித்து விட்டேன்.

இனிமேலும் ஓவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். அதேசமயம், ரசிகர்களையும் ஏமாற்ற மாட்டேன். நடிப்பதற்கு 100 சதவீதவாய்ப்பு உள்ளது என்றால் கவர்ச்சியாக நடிக்க நான் தயார்தான். ஆனால் அநாவசியமாக கவர்ச்சி காட்ட வேண்டும் என்றால்,ஸாரி.

சரி, கிஸ்ஸிங் சீனில் நடிப்பீர்களா என்று கேட்டதுதான் தாமதம், அதில் என்ன தவறு இருக்க முடியும். அதேசமயம், கதைக்குசம்பந்தப்பட்டதாக இருந்து, ஹீரோவும் திறமையானவராக (முத்தம் கொடுக்க என்ன திறமை வேண்டும்!) இருந்தால் அந்தக்காட்சியில் நான் நிச்சயம் நடிப்பேன்.

நடிப்பு என்று வந்து விட்டால் அப்படித்தான் நடிப்பேன், இவருடன்தான் நடிப்பேன் என்று கூறக் கூடாது. எப்படியும் நடிக்கத்தயாராக இருக்க வேண்டும்.

உங்களின் அழகு எதில் இருக்கிறது என்று ஒரு எடக்கு மடக்கான கேள்விக்கு பதிலளித்த தியா,

நான் மொத்தமும் அழகுதான். இருந்தாலும் சிரிக்கும்போது விழும் கன்னக் குழிதான் எனது கொள்ளை அழகு. ஆனால்,என்னுடன் நடித்த ஹீரோக்கள் யாருமே அதை கண்டுகொள்ளாதது எனக்கு வருத்தம் தான்.

வெற்றி பெறக் கூடிய வகையிலான கதையம்சத்துடன் கூடிய சொந்தப் படத்தை எடுப்பேன். சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகியநடிகைகள் பட்டியலைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நிச்சயம் வெற்றி பெறுவேன்.

எங்கள் வீட்டில் 3 பெண்கள், பலத்த எதிர்ப்பையும் மீறித்தான் சினிமாவுக்கே வந்தேன்.

சரி, யாரிடமாவது ஏமாந்திருக்கிறீர்களா? நிச்சயமா கிடையாது. என்னை யாராலும் ஏமாற்ற முடியாது. நான் பி.எஸ்.சி. சைக்காலஜிபடித்துள்ளேன். அதனால் பார்த்தவுடனேயே ஒருவரை எடை போட்டு விடுவேன். எனவே ஏமாற்ற நினைத்தால் பாச்சா பலிக்காது,என்றார்.

அழகான சைக்காலஜிஸ்ட்!

அவரது பிரஸ் மீட்டுக்குப் பின் விசாரித்த வகையில் தெரிய வந்த விவரங்கள்:

தியாவுக்கும் ஒரு மதுபான நிறுவனத்தின் மூத்த அதிகாரிக்கும் இடையே பத்திக்கிச்சாம். அவர் தான் தியாவை வைத்துப் படம்எடுக்க பைனான்ஸ் செய்யப் போகிறாராம். விரைவில் அவரது பணத்தில் ஒரு படக் கம்பெனியை தியா தொடங்கி, தானே நடிக்கப்போகிறார் என்று தெரிகிறது.

ஏற்கனவே அவர் தியாவுக்கு ஒரு வீட்டை வாங்கித் தந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அந்த மதுபான நிறுவனத்தின் மாடலாகநடிக்க பல நடிகைகள் தயங்கியபோது, தியா தான் துணிந்து நடித்தார். அப்படியே மூத்த அதிகாரிக்கு நெருக்கமாகிவிட்டாராம்.

Read more about: diya to produce own movie
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil