»   »  தியா.. தியா... தியா.. கோலிவுட்டில் தீ போல பரவி, அதே வேகத்தில் காணாமல் போனவர். கோடம்பாக்கத்தில் சாதிக்க குதித்த அவர் இப்போதுஅதே பெயரில் உருவாகும் படத்தை நம்பி பெரிய நம்பிக்கையுடன் காத்துள்ளார்.பட வாய்ப்புகள்தான் இல்லையே தவிர சந்தோஷத்திற்கு சற்றும் குறைவில்லாமல் படு ஜாலியாகத்தான் இருக்கிறார் தியா. இந்தபொங்கலை அவர் சற்று விசேஷமாக கொண்டாடினார். காரணம் பொங்கல் தினத்தன்றுதான் அவர் பிறந்தாராம். அத்தோடு இந்தவருடப் பொங்கலை, சென்னையில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் படு உற்சாகமாக கொண்டாடியுள்ளார் தியா.பொங்கல் தினத்தன்றுதான் எனக்கும் பிறந்த நாள். அதனால் வருடா வருடம் எனது பிறந்த நாளை படு சந்தோஷமாககொண்டாடுவேன். சில சமயம் மாட்டுப் பொங்கலின்போது எனது பிறந்த நாள் வந்து விடும். அந்த சமயத்தில் எல்லாப் பேரும்என்னைக் கலாய்த்துத் தள்ளி விடுவார்கள் என்று போய்க் கொண்டே இருந்தவரிடம், தமிழில் ஆளைக் காணோமே? என்று பிரேக் போட்டோம்..அப்படியெல்லாம் சொல்லி விட முடியாது. கோடம்பாக்கம் படம் வந்ததும் பாருங்கள், எனது நடிப்புத் திறமையை. தமிழில் ஒருசூப்பர் வாய்ப்பு என்னைத் தேடி வந்துள்ளது. அது கமல்சாருடன் நடிக்கும் அரிய வாய்ப்பு. கமல் சாரின் படத்திற்காக என்னைக்கேட்டுள்ளனர். நானும் சரி சொல்லி விட்டேன்.கமல் சாருடன் நடிப்பதென்றால் சும்மாவா, திறமை இருந்தால்தானே கூப்பிடுவார்கள்.. கோடம்பாக்கம் படத்தைத் தொடர்ந்து நான் நடிக்கும் தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும். இப்போது மலையாளத்தில் சுப்ரமணியம் என்ற படம் செய்து வருகிறேன். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில்நடித்துள்ளேன். இப் படத்திற்காக பல வெளிநாடுகளுக்குப் போகும் வாய்ப்பு வந்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, துபாய்என பல நாடுகளுக்குப் போய் ஒரு பாட்டை ஷூட் செய்தார்கள். மிக சூப்பர் அனுபவம் அது.ஆஸ்திரியாவில் ஒரு ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது. அங்கு மசாஜ் விசேஷம் என்று சொன்னார்கள். நானும் போய் மசாஜ்செய்து கொண்டேன். அப்படியே உடம்பெல்லாம் பஞ்சு போல மாறியதாக ஒரு ஃபீலிங். நீங்களும் ஆஸ்திரியா போனா ஒருதடவை மசாஜ் செய்து பாருங்கள் (ம்ஹூம்..).நான் வெறும் கிளாமர் ரோல்தான் செய்வேன் என்று சிலர் தப்பாக நினைத்து விட்டார்கள். அதனால்தான் என்னைத் தேடி பலகிளாமர் வாய்ப்புகள் வந்தபோது அதை ஏற்காமல் நிராகரித்து விட்டேன் (அப்டியா?)சேலை கட்டி என்னை நடிக்க வைத்துப் பாருங்கள், அப்படி ஒரு பாந்தமாக இருப்பேன். தமிழ்ப் பெண் என்பதால் எனக்கு தமிழ்சினிமாவில் சரியாக கவனிப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது, புறக்கணிக்கிறார்கள். இதே மும்பை, கேரளா என்றால் விழுந்துவிழுந்து கவனிக்கிறார்கள் (நெசந்தாங்க). என்னைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வந்து போய் விட்டன. கல்யாணம் ஆகி விட்டது, மலேசியா, சிங்கப்பூரில் ஏராளமாகசொத்துக்கள் வாங்கிப் போட்டதாகவும், அது, இது என்றும் ஏகப்பட்ட வதந்திகள். ஆனால் எதுவுமே என்னைக்கலங்கடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆனால் நிச்சயம் சொல்லி விட்டுத்தான் செய்வேன். அதேபோல நான் யாரையும்காதலிக்கவும் இல்லை. (அப்ப அந்த விளம்பரக் கம்பெனி வைஸ் பிரசிடெண்ட் காதலர் இல்லையா?).நல்ல வாய்ப்புகள் வந்தால் எந்த நடிகருடனும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். சின்னவர்கள், மூத்தவர்கள் என்ற பாகுபாடேகிடையாது. அதே சமயம் குத்துப் பாட்டுக்கு ஆட விருப்பம் இல்லை. நிறைய குத்துப் பாட்டு வாய்ப்பு வந்தது. ஆனால்ஒத்துக்கலே.நான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் குத்துப் பாட்டு என்றால் ஓ.கே. யாரோ ஒரு ஹீரோயினோட படத்துல நான் குத்துப்பாட்டு ஆடுவது என்பது எனக்கு சரி வராது.கோடம்பாக்கம் படம் வந்ததும் நான் மீண்டும் பிசியாகிவிடுவேன். அந்த அளவுக்கு தனம் என்ற கேரக்டரில் அசத்தியுள்ளேன்.பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க என்று கன்னத்தில் குழி விழ சிரிக்கிறார் தியா.அதையுந்தான் பாப்போமே...

தியா.. தியா... தியா.. கோலிவுட்டில் தீ போல பரவி, அதே வேகத்தில் காணாமல் போனவர். கோடம்பாக்கத்தில் சாதிக்க குதித்த அவர் இப்போதுஅதே பெயரில் உருவாகும் படத்தை நம்பி பெரிய நம்பிக்கையுடன் காத்துள்ளார்.பட வாய்ப்புகள்தான் இல்லையே தவிர சந்தோஷத்திற்கு சற்றும் குறைவில்லாமல் படு ஜாலியாகத்தான் இருக்கிறார் தியா. இந்தபொங்கலை அவர் சற்று விசேஷமாக கொண்டாடினார். காரணம் பொங்கல் தினத்தன்றுதான் அவர் பிறந்தாராம். அத்தோடு இந்தவருடப் பொங்கலை, சென்னையில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் படு உற்சாகமாக கொண்டாடியுள்ளார் தியா.பொங்கல் தினத்தன்றுதான் எனக்கும் பிறந்த நாள். அதனால் வருடா வருடம் எனது பிறந்த நாளை படு சந்தோஷமாககொண்டாடுவேன். சில சமயம் மாட்டுப் பொங்கலின்போது எனது பிறந்த நாள் வந்து விடும். அந்த சமயத்தில் எல்லாப் பேரும்என்னைக் கலாய்த்துத் தள்ளி விடுவார்கள் என்று போய்க் கொண்டே இருந்தவரிடம், தமிழில் ஆளைக் காணோமே? என்று பிரேக் போட்டோம்..அப்படியெல்லாம் சொல்லி விட முடியாது. கோடம்பாக்கம் படம் வந்ததும் பாருங்கள், எனது நடிப்புத் திறமையை. தமிழில் ஒருசூப்பர் வாய்ப்பு என்னைத் தேடி வந்துள்ளது. அது கமல்சாருடன் நடிக்கும் அரிய வாய்ப்பு. கமல் சாரின் படத்திற்காக என்னைக்கேட்டுள்ளனர். நானும் சரி சொல்லி விட்டேன்.கமல் சாருடன் நடிப்பதென்றால் சும்மாவா, திறமை இருந்தால்தானே கூப்பிடுவார்கள்.. கோடம்பாக்கம் படத்தைத் தொடர்ந்து நான் நடிக்கும் தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும். இப்போது மலையாளத்தில் சுப்ரமணியம் என்ற படம் செய்து வருகிறேன். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில்நடித்துள்ளேன். இப் படத்திற்காக பல வெளிநாடுகளுக்குப் போகும் வாய்ப்பு வந்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, துபாய்என பல நாடுகளுக்குப் போய் ஒரு பாட்டை ஷூட் செய்தார்கள். மிக சூப்பர் அனுபவம் அது.ஆஸ்திரியாவில் ஒரு ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது. அங்கு மசாஜ் விசேஷம் என்று சொன்னார்கள். நானும் போய் மசாஜ்செய்து கொண்டேன். அப்படியே உடம்பெல்லாம் பஞ்சு போல மாறியதாக ஒரு ஃபீலிங். நீங்களும் ஆஸ்திரியா போனா ஒருதடவை மசாஜ் செய்து பாருங்கள் (ம்ஹூம்..).நான் வெறும் கிளாமர் ரோல்தான் செய்வேன் என்று சிலர் தப்பாக நினைத்து விட்டார்கள். அதனால்தான் என்னைத் தேடி பலகிளாமர் வாய்ப்புகள் வந்தபோது அதை ஏற்காமல் நிராகரித்து விட்டேன் (அப்டியா?)சேலை கட்டி என்னை நடிக்க வைத்துப் பாருங்கள், அப்படி ஒரு பாந்தமாக இருப்பேன். தமிழ்ப் பெண் என்பதால் எனக்கு தமிழ்சினிமாவில் சரியாக கவனிப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது, புறக்கணிக்கிறார்கள். இதே மும்பை, கேரளா என்றால் விழுந்துவிழுந்து கவனிக்கிறார்கள் (நெசந்தாங்க). என்னைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வந்து போய் விட்டன. கல்யாணம் ஆகி விட்டது, மலேசியா, சிங்கப்பூரில் ஏராளமாகசொத்துக்கள் வாங்கிப் போட்டதாகவும், அது, இது என்றும் ஏகப்பட்ட வதந்திகள். ஆனால் எதுவுமே என்னைக்கலங்கடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆனால் நிச்சயம் சொல்லி விட்டுத்தான் செய்வேன். அதேபோல நான் யாரையும்காதலிக்கவும் இல்லை. (அப்ப அந்த விளம்பரக் கம்பெனி வைஸ் பிரசிடெண்ட் காதலர் இல்லையா?).நல்ல வாய்ப்புகள் வந்தால் எந்த நடிகருடனும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். சின்னவர்கள், மூத்தவர்கள் என்ற பாகுபாடேகிடையாது. அதே சமயம் குத்துப் பாட்டுக்கு ஆட விருப்பம் இல்லை. நிறைய குத்துப் பாட்டு வாய்ப்பு வந்தது. ஆனால்ஒத்துக்கலே.நான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் குத்துப் பாட்டு என்றால் ஓ.கே. யாரோ ஒரு ஹீரோயினோட படத்துல நான் குத்துப்பாட்டு ஆடுவது என்பது எனக்கு சரி வராது.கோடம்பாக்கம் படம் வந்ததும் நான் மீண்டும் பிசியாகிவிடுவேன். அந்த அளவுக்கு தனம் என்ற கேரக்டரில் அசத்தியுள்ளேன்.பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க என்று கன்னத்தில் குழி விழ சிரிக்கிறார் தியா.அதையுந்தான் பாப்போமே...

Subscribe to Oneindia Tamil
தியா.. கோலிவுட்டில் தீ போல பரவி, அதே வேகத்தில் காணாமல் போனவர். கோடம்பாக்கத்தில் சாதிக்க குதித்த அவர் இப்போதுஅதே பெயரில் உருவாகும் படத்தை நம்பி பெரிய நம்பிக்கையுடன் காத்துள்ளார்.

பட வாய்ப்புகள்தான் இல்லையே தவிர சந்தோஷத்திற்கு சற்றும் குறைவில்லாமல் படு ஜாலியாகத்தான் இருக்கிறார் தியா. இந்தபொங்கலை அவர் சற்று விசேஷமாக கொண்டாடினார். காரணம் பொங்கல் தினத்தன்றுதான் அவர் பிறந்தாராம். அத்தோடு இந்தவருடப் பொங்கலை, சென்னையில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் படு உற்சாகமாக கொண்டாடியுள்ளார் தியா.

பொங்கல் தினத்தன்றுதான் எனக்கும் பிறந்த நாள். அதனால் வருடா வருடம் எனது பிறந்த நாளை படு சந்தோஷமாககொண்டாடுவேன். சில சமயம் மாட்டுப் பொங்கலின்போது எனது பிறந்த நாள் வந்து விடும். அந்த சமயத்தில் எல்லாப் பேரும்என்னைக் கலாய்த்துத் தள்ளி விடுவார்கள் என்று போய்க் கொண்டே இருந்தவரிடம்,

தமிழில் ஆளைக் காணோமே? என்று பிரேக் போட்டோம்..

அப்படியெல்லாம் சொல்லி விட முடியாது. கோடம்பாக்கம் படம் வந்ததும் பாருங்கள், எனது நடிப்புத் திறமையை. தமிழில் ஒருசூப்பர் வாய்ப்பு என்னைத் தேடி வந்துள்ளது. அது கமல்சாருடன் நடிக்கும் அரிய வாய்ப்பு. கமல் சாரின் படத்திற்காக என்னைக்கேட்டுள்ளனர். நானும் சரி சொல்லி விட்டேன்.

கமல் சாருடன் நடிப்பதென்றால் சும்மாவா, திறமை இருந்தால்தானே கூப்பிடுவார்கள்..

கோடம்பாக்கம் படத்தைத் தொடர்ந்து நான் நடிக்கும் தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

இப்போது மலையாளத்தில் சுப்ரமணியம் என்ற படம் செய்து வருகிறேன். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில்நடித்துள்ளேன். இப் படத்திற்காக பல வெளிநாடுகளுக்குப் போகும் வாய்ப்பு வந்தது. ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, துபாய்என பல நாடுகளுக்குப் போய் ஒரு பாட்டை ஷூட் செய்தார்கள். மிக சூப்பர் அனுபவம் அது.

ஆஸ்திரியாவில் ஒரு ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது. அங்கு மசாஜ் விசேஷம் என்று சொன்னார்கள். நானும் போய் மசாஜ்செய்து கொண்டேன். அப்படியே உடம்பெல்லாம் பஞ்சு போல மாறியதாக ஒரு ஃபீலிங். நீங்களும் ஆஸ்திரியா போனா ஒருதடவை மசாஜ் செய்து பாருங்கள் (ம்ஹூம்..).

நான் வெறும் கிளாமர் ரோல்தான் செய்வேன் என்று சிலர் தப்பாக நினைத்து விட்டார்கள். அதனால்தான் என்னைத் தேடி பலகிளாமர் வாய்ப்புகள் வந்தபோது அதை ஏற்காமல் நிராகரித்து விட்டேன் (அப்டியா?)

சேலை கட்டி என்னை நடிக்க வைத்துப் பாருங்கள், அப்படி ஒரு பாந்தமாக இருப்பேன். தமிழ்ப் பெண் என்பதால் எனக்கு தமிழ்சினிமாவில் சரியாக கவனிப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது, புறக்கணிக்கிறார்கள். இதே மும்பை, கேரளா என்றால் விழுந்துவிழுந்து கவனிக்கிறார்கள் (நெசந்தாங்க).

என்னைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வந்து போய் விட்டன. கல்யாணம் ஆகி விட்டது, மலேசியா, சிங்கப்பூரில் ஏராளமாகசொத்துக்கள் வாங்கிப் போட்டதாகவும், அது, இது என்றும் ஏகப்பட்ட வதந்திகள். ஆனால் எதுவுமே என்னைக்கலங்கடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆனால் நிச்சயம் சொல்லி விட்டுத்தான் செய்வேன். அதேபோல நான் யாரையும்காதலிக்கவும் இல்லை. (அப்ப அந்த விளம்பரக் கம்பெனி வைஸ் பிரசிடெண்ட் காதலர் இல்லையா?).

நல்ல வாய்ப்புகள் வந்தால் எந்த நடிகருடனும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். சின்னவர்கள், மூத்தவர்கள் என்ற பாகுபாடேகிடையாது. அதே சமயம் குத்துப் பாட்டுக்கு ஆட விருப்பம் இல்லை. நிறைய குத்துப் பாட்டு வாய்ப்பு வந்தது. ஆனால்ஒத்துக்கலே.

நான் ஹீரோயினாக நடிக்கும் படங்களில் குத்துப் பாட்டு என்றால் ஓ.கே. யாரோ ஒரு ஹீரோயினோட படத்துல நான் குத்துப்பாட்டு ஆடுவது என்பது எனக்கு சரி வராது.

கோடம்பாக்கம் படம் வந்ததும் நான் மீண்டும் பிசியாகிவிடுவேன். அந்த அளவுக்கு தனம் என்ற கேரக்டரில் அசத்தியுள்ளேன்.பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க என்று கன்னத்தில் குழி விழ சிரிக்கிறார் தியா.

அதையுந்தான் பாப்போமே...

Read more about: diya to act with kamal
Please Wait while comments are loading...