Nayanthara: வல்லவன் படத்தில் நயன்தாரா வாங்கிய சம்பளம் 6 லட்சம்.. ஆனா இன்னைக்கு?

சென்னை: மலையாள சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா, சரத்குமாருக்கு ஜோடியாக தமிழில் ஐயா படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்த படத்தை முடித்த கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தில் நடித்த நயன்தாரா, வல்லவன் படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ள இவர் ஜவான் படத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கனுடன் ஜோடி போட்டு, உலகம் முழுவதும் மாஸ் காட்டி விட்டார்.

Do you know Nayanthara salary for Vallavan movie

டாப் நடிகை: தொடர்ந்து பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வரும் நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் உள்ளார். ஜவான் படத்திற்கு முன் 5 கோடி வாங்கி வந்த இவர், தற்போது 10 கோடியாக சம்பளத்தை உயர்த்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விளம்பரத்திற்கும்,5 கோடி சம்பளம் வேண்டும் என கறாராக கேட்கிறாராம். அந்த வகையில் அண்மையில் இவர், 50 வினாடிகள் நடித்த டாட்டா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் மாம்பழ ஜூஸ் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு 5 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வெறும் 6 லட்சம் சம்பளம்: 1 நிமிடம் கூட வராத விளம்பரத்துக்கு இத்தனை கோடியா? என நயன்தாராவின் ரசிகர்கள் வாயடைத்துப்போன நிலையில், இவர் வல்லவன் படத்தில் நடித்ததற்காக வெறும் 6 லட்சத்தை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. வல்லவன் படத்தின் தயாரிப்பாளரான தேனப்பன், அண்மையில் அளித்த பேட்டியில், வல்லவன் படத்தில் நயன்தாராவை, சிம்பு வேண்டாம் என்று சொன்னாரு. அந்த படத்திற்கு முன்பாக வேறு ஒரு படத்தில் நயன்தாராவை நடிக்க கமிட்டி செய்து இருந்தேன். 6 லட்சம் பேசி இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இருந்தேன். ஆனால், அந்த படம் நடக்காமல் போனதால், அட்வான்ஸ் வீணாகிவிடக்கூடாது என்று வல்லவன் படத்தில் நடிக்க வைத்தேன். ஆனால், இன்று நயன்தாராவின் சம்பளம் கோடியில் சென்று கொண்டு இருக்கிறது என்று தயாரிப்பாளர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வல்லவன்: 2006 ஆம் ஆண்டு சிலம்பரசன் இயக்கிய திரைப்படம் வல்லவன். இந்த படத்தில், நயன்தாரா, ரீமா சென், சந்தியா, சந்தானம், பிரேம்ஜி அமரன் மற்றும் எஸ். வி. சேகர் ஆகியோர் நடித்தனர். சிம்புவின் அசத்தலான இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியான இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்தில், நயன்தாரா சிம்புவின் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. இந்த படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது, இருவரும் காதலித்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X