ரூ.225 சம்பளம் வாங்கிய..ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ், தெலுங்கு திரையுலகில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள்,திரைத்துறை பிரபலங்கள் முதல் பலரும் இணையத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஜனவரி 10ந் தேதி 1990ம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். பள்ளிப்படிபை சென்னையில் தொடங்கிய இவர் மகளிர் எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். ஐஸ்வர்யாவின் தந்தை ராஜேஷ் தெலுங்கு திரைப்படங்களில் 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் என்பதால், ஐஸ்வர்யாவிற்கும் சினிமாவில் நுழையவேண்டும் என்ற ஆர்வம் சிறுவயது முதலே இருந்தது. இதனால், கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார்.

இதையடுத்து,கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, நீதானா அவன் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் அமுதா என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.இதையடுத்து, காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். அதன் பின் ரம்மி, திருடன் போலீஸ், வடசென்னை என அடுத்தடுத்த படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகை இடத்தில் இருக்கிறார்.
ரூ.225 சம்பளம்: நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா, குடிசை மாற்றுப் பகுதியான ஹவுஸிங் போர்டில் வளர்ந்தார். ஐஸ்வர்யா ராஜேஷூக்கு 8 வயது இருக்கும் போதே அப்பா இறந்து விட, அம்மா, மலிவு விலையில் புடவைகள் வாங்கி, வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றி உள்ளார். இந்த நேரத்தில், ஐஸ்வர்யாவின் மூத்த அண்ணன் ராகவேந்திரா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். இந்த சோகம் மனதை விட்டு மறைவதற்குள், ஐஸ்வர்யாவின் இரண்டாவது அண்ணன் சாலை விபத்தில் இறந்து விட, மொத்த குடும்ப சுமையும் ஐஸ்வர்யா மேல் விழுந்ததால்,11 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போதே சூப்பர் மார்க்கெட்டில் செல்ஸ் கேர்ளாக ரூ.225 ரூபாய்க்கு வேலை செய்து பின் படிபடியாக தனது கடுமையான உழைப்பால் தற்போது இந்த இடத்திற்கு உயர்ந்து இருக்கிறார்.
சொத்து மதிப்பு: இன்று 33வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் இன்றைய சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம். அவரின் சொத்து மதிப்பு 11 கோடி என்றும்,ஒரு படத்திற்கு அவர் ரூ 2 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும், விளம்பரம் மற்றும் இதர வருமானமாக அவருக்கு மாதத்திற்கு ரூ 2 லட்சம் வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











