Meera jasmine: நடிக்கவே தேவையில்ல..குடும்பமே உட்கார்ந்து சாப்பிடலாம்.. மீரா ஜாஸ்மினின் சொத்து மதிப்பு!

சென்னை: அழகான க்யூட் நடிகையான மீரா ஜாஸ்மின்,தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த நடிகையாக இருக்கிறார். இன்று 43 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் மீரா ஜாஸ்மினுக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த நடிகையின் சொத்து மதிப்பு பற்றி இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

ரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மின் தனது அழகான கண்களை உருட்டி உருட்டி ரசிகர்களை வசியம் செய்தார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, புதிய கீதை, ஆஞ்சநேயா,ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து பெயர் எடுத்தார். விஷாலுடன் இணைந்து சண்டைக்கோழி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் க்யூட்டான ரியாக்ஷன், அடாவடி செய்யும் பெண் என நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Meera jasmine net worth

நடிகை மீரா ஜாஸ்மின்: மேலும், தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய், மாதவன், பரத் மற்றும் அஜித், ஆகியோருடன் ஜோடியாக நடித்த பெருமையும் இவருக்கு உண்டு, தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கில், ரவி தேஜாவுடன் நடித்த பத்ரா படம் வசூலை அள்ளியதை அடுத்து, தெலுங்கிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியான நடித்து வந்தார்.

Meera jasmine net worth

விவாகரத்து பெற்றார்: படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, 2014ம் ஆண்டு துபாயை சேர்ந்த இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின் 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து அவரிடம் விவாகரத்து பெற்றார். திருமணத்திற்கு பின் உடல் எடை கூடி மிகவும் குண்டாக இருந்த மீரா ஜாஸ்மின், விஜயகாந்துக்கு ஜோடியாக மரியாதை படத்தில் நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அதன்பிறகு பல உடல் பயிற்சி செய்து எடையை குறைத்த மீரா ஜாஸ்மின், நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஜெயராமுக்கு ஜோடியாக Makal என்ற மலையாளப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

Meera jasmine net worth

சொத்து விவரம்: இந்நிலையில், மீரா ஜாஸ்மின் தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 60 கோடி சொத்து வைத்து இருக்கும் மீரா ஜாஸ்மின், மினி கூப்பர்,ஸ்கோடா, பேன்ஸ் போன்ற சொகுசு கார்களை வைத்து இருக்கிறார். மேலும், சென்னை, எர்ணாகுளத்தில் சொந்தமாக வீடு வைத்துள்ளதாக கூறப்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X