மாடலிங் டூ ஹீரோயின்.. ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஒயிட் ப்யூட்டியான நடிகை ராய் லட்சுமி தனது 35வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் இணையத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ராய் லட்சுமியின் சொத்துக் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
1989ம் ஆண்டு மே 5ந் தேதி பெங்களுரில் பிறந்தவர் தான் ராய் லட்சுமி. இவர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, சினிமாவில் நுழைய வேண்டும் என்பதற்காக மாடலிங்கில் ஈடுபட்டார். இதையடுத்து, புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்திருந்தார். விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே ஆர்.வி உதயக்குமார் இயக்கிய கற்க கசடற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை லட்சுமி ராய்: அந்த படத்தில் விக்ராந்த்துடன் ஜோடியாக அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது. இருந்தாலும், தமிழில் படவாய்ப்பு வரும் என காத்திருந்த ராய் லட்சுமிக்கு, தமிழில் படவாய்ப்பு இல்லாமல் போனதால் தெலுங்கு பக்கம் படவாய்ப்பை தேடி சென்றார். அங்கு, காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சுமாரான படம்: இதன்பின் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே பாடல் இவருக்கு தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடத்தை பிடிக்கவைத்தது. இதைத் தொடர்ந்து, முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் இவற்றில் எந்த திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரவில்லை. திறமையும் அழகும் இருந்தும், சரியான கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவில் உயரத்தை தொட முடியவில்லை.
கவர்ச்சி நடனம்: தமிழ், தெலுங்கு பக்கம் சென்று வேலைக்கு ஆகாததால், பாலிவுட் பக்கம் சென்ற லட்சுமி ராய், அங்கு படத்தின் பாடல் காட்சிக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டு வருகிறார். அண்மையில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். தற்போது தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாத ராய் லட்சுமி மலையாளத்தில் டிஎன்ஏ என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் பாய்சன் 2 என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.
சொத்து மதிப்பு: இந்நிலையில், நடிகை ராய் லட்சுமி இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் நண்பர்களும், ரசிகர்களும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் நடிகை ராய் லட்சுமிக்கு எவ்வளவு சொத்து இருக்கும் என்பதையும் ரசிகர்கள் கணக்கு எடுத்துள்ளனர். அந்த வகையில் ராய் லட்சுமிக்கு 30 கோடியில் இருந்து 50 கோடி சொத்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சொத்து மதிப்பை தெரிந்து கொண்ட இணையவாசிகள் படமே இல்லை என்றாலும் சொத்துக்கு பஞ்சமே இல்லையே என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











