சமந்தாவின் பிரமாண்ட வீடு..மினி தியேட்டர், ஜிம் என சகலமும் இருக்கு.. விலை என்ன தெரியுமா?
சென்னை: சிறுவயதிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்து, 500 ரூபாய் வெல்கம் கேர்ளாக பணியாற்றிய சமந்தா, இன்று டாப் நடிகை என பெயர் எடுத்திருக்கிறார் என்றால், அந்த வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் வலியும் வேதனையும் மிகப்பெரியதே, பல கஷ்டத்தை அனுபவித்த, சமந்தா, பல கோடிக்கு சொந்தக்காரியாக இருக்கிறார். ஹைதராபாத்தில் அவர் இருக்கும் வீட்டின் மதிப்பு மட்டும் பல கோடி என்று கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையான சமந்தா தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகராக நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னர் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் திருமண வாழ்க்கை நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்து விவாகரத்து செய்து முறையாக பிரிந்து விட்டார்கள்.

நடிகை சமந்தா: இது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த சமயத்தில் நாக சைதன்யாவின் குடும்பத்தார் சமந்தாவிற்கு ரூ.250 கோடி ஜீவனாம்சமாக கொடுக்க முன் வந்ததாகவும், அந்த பணத்தை சமந்தா வாங்க மறுத்து, தனக்கு அந்த எனக்கு தேவையில்லை எடுத்துக்கொண்டு போங்கள் என முகத்தில் அடித்தார் போல் தனது மாமனார் நாகர்ஜூனிடம் சொல்விட்டதாக செய்திகள் வெளியானது.
அதே பகுதியில் நாகசைதன்யா: விவாகரத்திற்கு முன் சமந்தாவும் நாகசைதன்யாவும் ஐதராபாத்தில் உள்ள ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பங்களாவில் வாழ்ந்து வந்தனர். இருவரும் பிரிந்த பின் நாகசைதன்யா அந்த வீட்டில் இருந்து வெளியேறி ஓட்டலில் தங்கினார். தற்போது, அவர், ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் ரூ. 15 கோடிக்கு புது வீடு வாங்கி குடியேறி இருக்கிறார்.அதுவும் சமந்தா வசிக்கும் பகுதியிலேயே நாக சைதன்யா வீடு வாங்கி குடியேறியிருக்கிறார்.
வீட்டின் மதிப்பு: நாகசைதன்யாவும் வாழ்ந்த அதே வீட்டில் தான் சமந்தா தற்போது வசித்து வருகிறார். அந்த பங்களாவின் மதிப்பு மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. நடிகைகளில் விலை உயர்ந்த வீடு வைத்திருப்பதாக சமந்தா மட்டும் தானாம். அந்த வீட்டில் ஜிம், நீச்சல் குளம், மினி தியேட்டர், வண்ண விளக்குகளால் ஆன பிரம்மாண்டமான வரவேற்பு அறை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை, பல ஊர்களில் இருந்து எடுத்துவரப்பட்ட கைவினை பொருட்கள் என வீடே சும்மா அட்டகாசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











