ஷில்பா ஷெட்டியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மும்பை: பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ஷில்பாவின் தீவிர ரசிகர்கள் அவரின் விதவிதமான வீடியோவை வெளியிட்டு இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அவரின் மொத்த சொத்து மதிப்பு, பிஸ்னஸ் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்

பாலிவுட் நடிகையாக ஷில்பா ஷெட்டி 1993ம் ஆண்டு வெளியான பாஸிகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து,1996ம் ஆண்டு தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான மிஸ்டர் ரோமியோ படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். பின்னர், எஸ்.ஜே., சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியாகி குஷி படத்தில் மேக்கரினா மேக்கரினா பாடலுக்கு நடனமாடி தமிழ் ஆடியன்சுக்கு தெரிந்த முகம் ஆனார்.

actress Shilpa Shetty raj kundra Net worth

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி: படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த ஷில்பா, ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் இணை உரிமையாளராக இருந்த ராஜ் குந்த்ராவை 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2020ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர், ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, 2 மாதம் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், ராஜ் குந்த்ரா தனது சிறை வாழ்க்கையை 'யுடி69’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியிட்டார்

ஷில்பாவின் பிஸ்னஸ்: இன்று நடிகை ஷில்பா ஷெட்டி தனது 49வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நாளில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் பிஸ்னஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். ஷில்பா ஷெட்டி மும்பையில் 2019 ஆம் ஆண்டு ஃபைன் டைனிங் உணவகத்தில் 50% பங்குகளை வாங்கினார். 2022ம் ஆண்டு ஷில்பா ஷெட்டி சந்தீப் மானேவுடன் இணைந்து SVS ஸ்டுடியோவை நிறுவினார். அந்த VFX ஸ்டுடியோவில் ரூ. 10 கோடி முதலீடு செய்தார்.

2023 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள கோஹினூர் டவரின் மேல் தளத்தில் ஒரு புதிய விற்பனை நிலையத்தை தொடங்கினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்பும், நடிகை ஷில்பா ஷெட்டி, யோகா, வலிமை பயிற்சி மற்றும் ஏரோபிக்ஸ் போன்ற பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்யும் இவர், 2019 ஆம் ஆண்டில், சிம்பிள் சோல்ஃபுல் என்ற பெயரில் பிட்னஸ் ஆப்பை அறிமுகப்படுத்தினார்.

சொகுசு கார்: பல வழிகளில் வருமானத்தை ஈட்டி வரும் ஷில்பா ஷெட்டியின் சொத்து மதிப்பு மட்டும் 134கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அவர் 6.2 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி அவென்டடோரு, பிஎம்டபிள்யூ ஐ8 காரும், பென்ட்லி கான்டினென்டல் ஜிடி,பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர், ரேஞ்ச் ரோவர் வோக் என பல சொகுசுக்கார்களை வைத்து இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X