நடிகை மந்த்ராவை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?
சென்னை: பிரியம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மந்த்ராவிற்கு, தற்போது 44 வயதாகிறது. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனது ஆறாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். வளர்ந்த பிறகு பலத்திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் மந்த்ரா, இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?
நடிகை மந்த்ரா அருண் விஜய்க்கு ஜோடியாக 'பிரியம்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் ராசி என்ற பெயரில் அறிமுகமான இவர், பிரியம் படத்திற்காக தனது பெயரை மந்த்ரா என மாற்றிக்கொண்டார். இவர் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மந்த்ராவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கலாட்டா கல்யாணம், கொண்டாட்டம், புது குடுத்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம் என பல படத்தில் நடித்துள்ளார். நடிகை மந்த்ரா தமிழை விட தெலுங்கில் தான் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களுக்கு இவரை ராசி என்று சொன்னால் தான் தெரியும், ராசியான நடிகை என்பதால், நடிகை மந்த்ரா அந்த பெயரை வைத்துக்கொண்டார்.

நடிகை மந்த்ரா: ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து, தெலுங்கு பக்கம் சென்ற மந்திராவிற்கு படவாய்ப்பு குறைந்ததால், கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். பின் 2005ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீமுனியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார் நடிகை மந்த்ரா. திருமணத்திற்கு பின் மந்த்ராவிற்கு பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. பின், பத்து வருடங்கள் கழித்துத்தான் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை மந்த்ரா, குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது, மந்த்ரா ஒரு திரைப்படத்தில், சிங்கிள் மதர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மந்த்ராவை விரைவில் பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வாக உள்ளனர்.
வீணாப்போச்சு: அண்மையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த மந்த்ரா, நான் 2003ஆம் ஆண்டு, மகேஷ் பாபு, ரவி தேஜா நடித்த நிஜம் என்கிற படத்தில் நடித்திருந்தேன். அந்த திரைப்படம் தான் என் இமேஜையும், கேரியரையும் நாசமாக்கியது. அந்த படத்தில் நான் ரவி தேஜாவின் ஆசை நாயகியாக அவருடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருப்பேன், இயக்குநர் இந்த படத்தின் கதையை என்னிடம் சொல்லும், இப்படி ஒரு ரோல் என்று என்னிடம் சொல்லவில்லை. ஆனால், படப்பிடிப்பின் போது, அந்த காட்சியில் நடிக்க மறுத்தேன். ஆனால், படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், என்னால், அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை. இதனால், அந்த படத்தில் விருப்பமே இல்லாமல் நடித்தேன். ஒரு படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரங்கள் தான் வந்தது. இதனால், என் சினிமா கேரியரே வீணாகிவிட்டது என்று நடிகை மந்த்ரா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











