Sri diviya Salary: ரீ என்ட்ரியா ஸ்ரீதிவ்யா.. மெய்யழகன் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியானத் திரைப்படம் மெய்யழகன். மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
த்ரிஷா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தை இயக்கி அனைவரையும், காதலே ... காதலே என புலம்ப வைத்தவர் தான் இயக்குநர் பிரேம் குமார். அந்த படத்தை தொடர்ந்து அவர் இயக்கி உள்ள இரண்டாவது படம் தான் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்திக்,அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர். மேலும், சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார்.

மெய்யழகன் படத்தின் கதை: சொத்து பிரச்சனையால், பிறந்து, வாழ்ந்த ஊரைவிட்டு, குடும்பத்துடன் சென்னையில் செட்டிலாகி விடுகிறார் அரவிந்த் சாமி. 22 வருஷமாக எந்த ஒரு நல்லது கெட்டதிற்கும் ஊர் பக்கம் தலைகாட்டாத அரவிந்த் சாமி, தன் தங்கையின் திருமணத்துக்காக 22 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு மொத்த பசத்தையும் கொட்டி 'அத்தான் அத்தான்' என உருகி அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து உடன் இருந்து கவனித்து கொள்கிறார் கார்த்தி. ஆனால், அரவிந்த் சாமிக்கு கார்த்திக் யார், என்ன உறவு என்பதெல்லாம் தெரியாது. யார் என்றே தெரியாத ஒருவரின் அன்பு, அரவிந்த் சாமியை எப்படி ஆட்கொண்டது, இறுதியில், அரவிந்த் சாமிக்கு, கார்த்தி யார், என்ன உறவு என்று தெரிந்ததா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஸ்ரீதிவ்யாவின் சம்பளம்: 33 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மெய்யழகன், நேற்று தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தின் முதல் நாள் வசூல், மூன்று கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ஸ்ரீ திவ்யா ரூ. 70 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் வெளியான சிவகார்த்திகேயனின் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படம் மூலம் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தமிழ், தெலுங்கு மாற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு படவாய்ப்பு இல்லாததால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











