கேஜிஎஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி..கோப்ரா படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை : கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, கோப்ரா படத்திற்காக வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய நடிகையாகவும், மாடலாகவும் இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி 2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர்.

இதை தொடர்ந்து அதே ஆண்டு மிஸ் திவா போட்டியில் கலந்து கொண்டு மிஸ் திவா சுப்ரநேஷனல் 2016 பட்டத்தை தட்டி சென்றார். மேலும், மிஸ் சுப்ரநேஷனல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுவென்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

28 வயதாகும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட திரையுலகில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் ஏதோ பெயருக்கு வரும் ஹீரோயினாக வந்த ஸ்ரீநிதி, கேஜிஎஃப் பாகம் இரண்டில் " வா வா என் அன்பே" பாடல் மூலம் அழைக்காமே மனதிற்குள் வந்து அமர்ந்து கொண்டார்.

ஹவுஸ்புல் காட்சிகள்

ஹவுஸ்புல் காட்சிகள்

கேஜிஎஃப் முதல் பாகத்தில் இருந்த சுவாரசியம் காரணமாக பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இத்திரைப்படம், சுமார் பத்து நாட்களுக்கு மேலாக தமிழகத்தின் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையிடப்பட்டது. நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்துடன் வெளியாகி இருந்தாலும் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது.

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகத்தை கொடுத்த ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ரூ. 6 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகைகளை விட அதிகமான சம்பளமாகும்.

ஏழு வித்தியாசமான ரோல்

ஏழு வித்தியாசமான ரோல்

கோப்ரா திரைப்படத்தில் 7 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் அந்த அனைத்து கதாபாத்திரத்துக்கும் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக டப்பிங்கிலும் வித்தியாசம் காட்டி உள்ளார். இப்படத்தில் ஆனந்த்ராஜ், கே.எஸ்.ரவிக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோபோ சங்கர் என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X