Nayanthara: விருதுடன் போஸ் கொடுத்த நயன்தாரா.. கட்டி இருந்த புடவையின் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாரா அண்மையில் நடந்த அரசு விருது வழங்கும் விழாவில், தனக்கு மூன்று விருதுகள் வழங்கப்பட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அந்த போட்டோவில் நயன்தாரா அணிந்து இருந்த புடவை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்களுக்கு, சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர்களுக்கு திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியிலும் பல ஆண்டுகளாக விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் அண்மையில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை விருதுகள் சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டன.

Nayanthara saree price
Photo Credit:

நடிகை நயன்தாரா: இதில், 2017ம் ஆண்டு வெளியான அறம் திரைபடத்தில் கலெக்டராக கம்பீரமாக நடித்து அசத்திய நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதுடன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நெற்றிக்கண் மற்றும் கூழாங்கல் படங்களுக்கும் விருது வழங்கப்பட்டன. மொத்தம் 3 விருதுகளை பெற்ற நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் விருதுகளுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு இருந்தார்.

புடவையின் விலை: அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டானது. அதில், நயன்தாரா மிகவும் சிம்பிளாக ஒரு சேலை அணிந்து கொண்டு, அந்த புடவைக்கு தகுந்த படி ஜிமிக்கி அணிந்து இருந்தார். நடிகை நயன்தாரா அழகிய சேலையில் எடுத்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வந்த நிலையில், நயன்தாரா கட்டி இருந்த சேலை அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த புடவை "நீலப் அனுவர்தன் பிராண்டின்" புடவை ஆகும். பிளாக் அண்ட் ஒயிட் மைக்ரோ செக்செட் போட்ட புடவையை, பிளாக் அண்ட் ஒயிட் கம்பைன் செக் மாடலுடன் இந்த புடவையை டிசைன் செய்து இருகிறார்கள். புடவையின் முந்தானை கோல்டன் நிறத்தில் சரிகையுடன் வருகிறது. இந்த புடவைக்கு மேட்சாக கருப்பு நிறத்தில் பிளைன் ஜாக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. நயன்தாரா கட்டி இருக்கும் இந்த புடவையின் விலை 23,800 ரூபாய் என சொல்லப்படுகிறது. தற்போது இந்த புடவை தான் இணையத்தில் டிரெண்டாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X