பிசாசு படத்தில் பேயாக நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: மலையான திரைப்பட நடிகையான ப்ரயாகா ரோஸ் மார்ட்டின், குறும்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் பின் தான் அவர் மிஸ்கின் இயக்கிய பிசாசு படத்தில் பேயாக நடித்திருந்தார். அந்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படம் தான் பிசாசு. இந்த படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ப்ரயாகா ரோஸ் மார்டின். அதாவது அந்த படத்தில் கார் விபத்தில் உயிரிழந்து பின் பேயாக வரும் பெண். கேரளா நடிகையான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான சாகர் அலயஸ் ஜாக்கி ரீலோடட் என்ற மலையாள படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் நடிகையாக மாறினார்.

pisaasu prayaga martin

ப்ரயாகா மார்ட்டின்: இதன் பின்பு கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான உஸ்டாத் ஹோட்டல் என்ற மலையாள படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இவர் மிஸ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோ யார் என்றே தெரியாது. அதே போல ஹீரோயினும் ஒரு சில காட்சியில் மட்டும் தான் வந்து இருப்பார். பேய் படம் என்றால், அனைவரும் பிசாசு என்று பெயர் வைத்துவிட்டு, பேயை தேவதையாக காட்டி இருந்தார். இந்த படம் வெற்றி பெற்றாலும், அவருக்கு அதன் பின் தமிழில் படவாய்ப்பு வரவில்லை.

pisaasu prayaga martin

பட வாய்ப்பு இல்லை: இதையடுத்து, 2014ஆம் ஆண்டு வெளியான ஒரு முறை வந்து பார்த்தாயா என்ற மலையாள படத்தில் நடிகை ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் அறிமுகமானார். பொதுவாக சினிமா உலகில் புதிய பட வாய்ப்புகளை பெற நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பார்கள். ஆனால் நடிகை பிரயாகா ரோஸ் மார்ட்டின் தனக்கு பட வாய்ப்புகள் இல்லாத போதும் கவர்ச்சியாக நடிக்க மறுத்து தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலே நடித்து வந்தார்.

எப்படி இருக்கிறார் தெரியுமா: நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில், நவசராவில் கிட்டார் கம்பி மேலே நின்று என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் என்ன பேசுகிறோம், ஏன் பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்பதே தெரியாமல் படத்தில் சூர்யாவும், ப்ரயாகா ரோஸ் மார்ட்டினும் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தார்கள். காதல் ரசம் உருவான இந்த படம் ப்ரயாகா ரோஸ் மார்ட்டினுக்கு திருப்புமுனையான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இவருக்கு படவாய்ப்பே இல்லாததால், கேரள தொலைக்காட்சியில். Super Kudumbam, Comedy Stars season 3,Dancing Stars போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X