‘’ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’’ ரெட் பட நடிகை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

சென்னை: ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார் நடிகை பிரியா கில். இவர், அஜித் நடித்த ரெட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரே படத்திலேயே அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக மாறி இவர். தற்போது, எப்படி இருக்கிறார் என்று பார்க்கலாம்.

மாடல் அழகியான பிரியா கில் 1996ம் ஆண்டு வெளியான தேரி மேரா சப்னா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்திரச்சூர் சிங், அர்ஷத் வர்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் பாக்ஸ் ஆபிசில் தோல்வித் திரைப்படமான அமைந்தது. இருந்தால், அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார், சுனில் ஷெட்டியுடன் படே தில்வாலா படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்து படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Red Priya ghill Ajithkumar

ரெட் படத்தில்: அந்த படத்தை தொடர்ந்து தமிழில் அறிமுகமான பிரியா கில், ரெட் படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்தார். 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மணிவண்ணன், ராஜேஷ், சலிம் கௌவுஸ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்த நிலையில், ஆறு பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்தில், ஒல்லிக்குச்சி உடம்புக்காரி பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, ரசிகர்களுக்கு பிடித்தமான பாடலாக மாறியது.

Red Priya ghill Ajithkumar

என்ன செய்கிறார் தெரியுமா: இத்திரைப்படம் அஜித் திரை பயணத்தில் மிக மோசமான தோல்வி படமாக அமைந்தது. இதனால் தமிழ் திரையுலகில் மார்க்கெட் இழந்த பிரியா கில் எந்த வாய்ப்பையும் பெறாததால் தமிழ் சினிமாவில் இருந்து விலகினார். அதன் பின், இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

Red Priya ghill Ajithkumar

2006ம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படம் தான் பிரியா கில் நடித்த கடைசி திரைப்படம். அத்துடன் சினிமாவில் இருந்து விலகிய இவர். 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு டென்மார்க்கில் குடியேறி குடும்பத்துடன் மகிச்சியாக இருக்கிறார். தற்போது இவர் ஒரு மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X