மாயநதி வெண்பாவை இதற்கு முன்னாடியும் நாம பார்த்துருக்கோம்.. எங்கேன்னு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!
சென்னை: கற்றது தமிழ், சிவகாசி, கஜினி, சத்யம் உள்ளிட்ட பல படங்களில் மாயநதி படத்தின் நாயகி வெண்பா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அசோக் தியாகராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் மாயநதி. கடந்த ஜனவரி 31ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றுள்ள வெண்பா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.
ராம் இயக்கத்தில் ஜீவா, அஞ்சலி, கருணாஸ் நடிப்பில் வெளியான கற்றது தமிழ் படத்தில், நிசமாத்தான் சொல்றியா என ஒன்றும் அறியாத சிறுமியாக கேட்கும் பெண் வெண்பா தான்.
அதே போல, கஜினி படத்தில் கடத்தப்படும் சிறுமிகளில் ஒருவராக நடித்திருப்பார். மேலும், விஜய்யின் சிவகாசி, விஷாலின் சத்யம் என பல படங்களில் நடித்துள்ளார்.
தந்தையிடம் பாசம் காட்டும் பெண்ணாகவும், படிப்பில் கவனம் செலுத்தும் மாணவியாகவும், பருவ காலத்தில் வரும் காதலில் சிக்கித் தவிக்கும் நாயகியாகவும் வெண்பா வித்தியாசமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
காதல் கசக்குதய்யா படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான வெண்பா தற்போது, மாயநதி படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஹீரோ அபி சரவணனுடன் காதல் காட்சிகளிலும், தந்தையாக நடித்த ஆடுகளம் நரேனுடன் பாசமான பெண்ணாகவும் நடித்து அசத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











