சொகுசு கார்.. பல கோடியில் அசையா சொத்து.. ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: 1983ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கிய ரம்யா கிருஷ்ணன் இன்று வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் நடித்த படையப்பா திரைப்படத்தின் நீலாம்பரி கதாபாத்திரத்தால் ஒட்டுமொத்த சினிமாவும் அவரை திரும்பி பார்த்தது. தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1970ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். மறைந்த பழம்பெரும் நடிகர் சோ ராமசாமியின் உறவுக்கார பெண்ணான இவர். 1983ம் ஆண்டு வெள்ளை மனசு என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை என்றாலும், இவரின் வசீகரமான முகம் அனைவருக்கும் பிடித்துவிட்டதால் அடுத்தடுத்த படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது.

நடிகை ரம்யா கிருஷ்ணன்: இவர் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் உலக அளவில் மிகப் பிரபலமாக தூக்கி கொண்டாடப்பட்ட இந்திய திரைப்படமான பாகுபலியில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு பெயரும் புகழும் பெற்றுத் தரும் ஒரு திறமையான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இன்று பிறந்த நாள்: இவர் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனுக்கு ரித்விக் வம்சி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் இணையத்தின் வாயிலாக பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சொத்து மதிப்பு தெரியுமா: இந்த நேரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பயணித்து வரும் ரம்யா கிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ. 98 கோடிக்கும் மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர் படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், சின்னத்திரையில் ஒரு எபிசோடுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











