அடேங்கப்பா.. தனுஷ் ஹீரோயின் வச்சிருக்கிற ஹேண்ட்பேக் விலை இவ்வளவா? கேட்டு அதிர்ச்சி அடைச்சிடாதீங்க!
மும்பை: பிரபல நடிகை வைத்திருக்கும் ஹேண்ட்பேக்கின் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இந்தி ஹீரோ அனில் கபூரின் மகள் இவர். சஞ்சய் லீலா பன்சாலியின் சவாரியா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அடுத்து டெல்லி -6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், பாம்பே டாக்கிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தனுஷ் ஜோடி
ஆனந்த் எல்.ராய் இயக்கிய ரான்ஜனா என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்தப் படம் தமிழில், டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இவர் தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

காஸ்ட்லி பொருட்கள்
பொதுவாக, பெரும்பாலான நடிகர், நடிகைகள் பிராண்டட் பொருட்களைத்தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். உடுத்தும் உடைகளில் இருந்து அனைத்துமே அப்படித்தான். வீடுகளில் கூட காஸ்ட்லியான பொருட்களைத்தான் வைத்திருப்பார்கள். அதை கவுரவம் என்று கருதுவார்கள். கோடிகளில் பணம் கிடைப்பதால், இப்படி செலவழிப்பார்கள். அதற்கு நடிகை சோனம் கபூரும் விதிவிலக்கல்ல.

ஹேண்ட்பேக் விலை
அவர் ஏற்கனவே கோடீஸ்வர வீட்டுப் பெண் என்பதால் சிறுவயதில் இருந்தே ரிச்சாக வளர்ந்தவர். வாழ்ந்து வருபவர். மிகப்பெரிய பிராண்டட் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் அவர்தான் நாட்டுக்கு அறிமுகம் செய்கிறார் என்று சொல்வார்கள். அந்த வகையில் அவர் பயன்படுத்தும் ஹேண்ட்பேக்கின் விலைதான் பாலிவுட் பிரபலங்களையே மூக்கில் விரல் வைக்க வைத்திருக்கிறது.

காஸ்ட்லியோ காஸ்ட்லி
பொதுவாக பெண்கள், ஹேண்ட்பேக் மேல் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நடிகைகள் கேட்க வேண்டாம். அவர்களுக்கு அது கவசம் மாதிரி. எப்போதும் அது கூடவே இருக்கும். சிலர் தனது ஹேண்ட்பேக் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக காஸ்ட்லியான ஒன்றை வாங்குவது வழக்கம். ஆனால், சோனம் கபூர் வைத்திருக்கும் ஹேண்ட்பேக்கின் விலையோ, காஸ்ட்லியோ காஸ்ட்லியாம்!

வியக்கும் ரசிகர்கள்
ஆமாம். அதன் விலை ஜஸ்ட், ரூ.8,60,000-தானாம்! புகழ்பெற்ற ஹெர்ம்ஸ் பிர்கின் என்ற காஸ்ட்லி பிராண்ட் பேக்காம் அது. அதனால்தான் அந்த விலை என்கிறார்கள். நடிகைகள் காஸ்ட்லி பேக் வைத்திருப்பார்கள் என்பது தெரியும். இவ்வளவு காஸ்ட்லியான பேக் வைத்திருப்பார்கள் என்பது தெரியாது என்று வியக்கிறார்கள், ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











