ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள்.. சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னை: சினிமா பிரபலங்கள் என்றாலே விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவது, வாட்ச் வாங்குவதில் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் நடிகை சமந்தா, விலை உயர்ந்த வாட்ச் அணிந்து கொண்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், வாட்ச்சின் விலையை கேட்டு ரசிகர்களுக்கு சற்று தலையே சுற்றிவிட்டதாம்.

நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இவர்களது விவாகரத்துக்கான உண்மையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் விவாகரத்து முடிவால், சமந்தா மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்பது உண்மை. விவாகரத்துக்கு பின் படங்களில் பிஸியான சமந்தா, புஷ்பா படத்தில், ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குலுங்கி குலுங்கி ஆடி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றார்.

Do you know the price of the watch worn by actress Samantha

நடிகை சமந்தா: இதையடுத்து, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அந்த வலி மரணத்தைவிட கொடுமையாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க கூறியிருந்தார். இதையடுத்து, பல கட்ட சிகிச்சைக்கு பிறகு அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த சமந்தா, தனக்கு இருக்கும் நோயினை பொருட்படுத்தாமல் கையெழுத்திட்ட படங்களை நல்ல படியாக முடித்துவிட்டார். நடிகை சமந்தா சிட்டாடல் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் பல வருடங்களாக நடந்து வருகிறது. இத்தொடரின் டப்பிங் பணிகள் முடிந்து மே மாதத்தில் இத்தொடரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Do you know the price of the watch worn by actress Samantha

சிட்டாடல் இந்தியா தொடரின் படப்பிடிப்பை முடித்த பிறகு, அவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று. ஒரு வருடத்திற்கு எந்த வேலையும் செய்ய மாட்டேன் என உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், சமந்தா தற்போது மலேசியா, சிங்கபூர்,பிரான்ஸ், தாய்லாந்து என வெளிநாடுகளில் சுற்றி வருகிறார். மலேசியா சென்றிருந்த சமந்தா, ரெசார்ட்டில் பிரவுன் கலர் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்திருந்தார். சிட்டாடல் வெப்சீரிஸில் சமந்தா படுக்கை அறை காட்சியில் நடித்ததாக சொல்லப்பட்ட நிலையில், இந்த நீச்சல் உடை போட்டோவை பார்த்த போது அனைவரும், சிட்டாடலில் கவர்ச்சி அதிகமாக இருக்கும் என்ற பேச்சு எழுந்தது.

Do you know the price of the watch worn by actress Samantha

வாட்ச்சின் விலை: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டான நிலையில் அவர் அணிந்து இருந்த வாட்ச்சின் விலை தான் தற்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. Serpenti Spiga என்ற அந்த வாட்ச்சின் விலை சுமார் 70 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி இருக்கிறது. விலையை கேள்விப்பட்ட ரசிகர்களுக்கு சற்று தலையே சுற்றிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X