குறைந்த வருமானம்.. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியங்கா மோகன்.. என்ன வேலை செய்தார் தெரியுமா?

சென்னை: சினிமாவிற்கு வருவதற்கு முன் நடிகை பிரியங்கா மோகன் செய்த வேலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார்.

தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா அருள் மோகன், அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவே நடித்தார்.

Do you know what Priyanka Mohan did before entering cinema?

நடிகை பிரியங்கா மோகன்: கடந்த 2019ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான ஒந்து கதை ஹெல என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன். பின்னர் அதே ஆண்டில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கேங் லீடர் படத்தில் அறிமுகமானார். தமிழில் இவர் நடித்த டான் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

கேப்டன் மில்லர்: தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் பிரியங்கா ஜோடி சேர்ந்துள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாகவே நடந்தது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள தனுஷை திரையில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

அடுத்தடுத்த படங்களில்: பிஸியான நடிகை: தெலுங்கில் நானியுடன் கேங் லீடர், சர்வானந்துடன் ஸ்ரீகாரம் படங்களில் நடித்துள்ள பிரியங்கா, அடுத்ததாக மகேஷ்பாபு, பவன் கல்யாண் ஆகியோருடன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பவன் கல்யாணுடன் ஓஜி என்ற படத்தில் இவர் ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

கவினுக்கு ஜோடியாக: அதே போல நடிகர் கவினின் 6வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள நிலையில், அவரிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலம் படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் கவினுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் கவின், எஸ்ஜே சூர்யா காம்பினேஷன் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டு வருகின்றன.

சொற்ப வருமானம்: படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் செய்த வேலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடல் அழகியாக இருந்த இவருக்கு கணிசமான வருமானமே வந்துள்ளது. ஆனால், இவருடைய பவ்யமான தோற்றம் அழகால் இவருக்கு கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதனை அடுத்து இவர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்துக் கொண்டு சிறப்பாக நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X