2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்..யார் இந்த நிகோலய் சச்தேவ்?

சென்னை: தமிழ் தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமாருக்கு நேற்று முன்தினம் மும்பையில் மிகவும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் யார் இந்த நிகோலய் சச்தேவ் என ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சிம்பு நடிப்பில் கடந்த 2012 ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார். முதல் படத்திலேயே சொந்தக்குரலில் பேசி மிகவும் எதார்த்தமாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து மாணிக்யா என்ற கன்னட படத்திலும், கசபா என்ற மலையாளப்படத்திலும் நடித்தார். மேலும், பாலாவின் இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.

Do you know who is Varalakshmi Sarathkumar s future husband Nikolai Sachdev

நடிகை வரலட்சுமி: நடித்த வரலட்சுமி நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் நடிப்பேன் என்று தைரியமாக நெகடிவ் ரோலில் நடித்து வருகிறார். விஷாலுடன் இவர் நடித்த சண்டக்கோழி 2, விஜய்யுடன் சர்கார் உள்ளிட்ட படங்களில் பவர்ஃபுல் வில்லியாக நடித்து முத்திரை பதித்த வரலட்சுமி, இடையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், வில்லியாக பல படங்களில் நடித்து வரும் வரலட்சுமி தமிழை விட தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர், கடைசியாக தெலுங்கில் வெளியான ஹனுமான் படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் படத்தில் நடித்துள்ளார்.

Do you know who is Varalakshmi Sarathkumar s future husband Nikolai Sachdev

நீண்ட நாள் காதலன்: இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் நேற்று முன் தினம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பெற்றோர் முன்னிலையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மோதிரம் மாற்றிகொண்டனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you know who is Varalakshmi Sarathkumar s future husband Nikolai Sachdev

யார் இந்த நிக்கேலய்: இவர்களின் நிச்சயதார்த்த போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வரலட்சுமி திருமணம் செய்து கொள்ளும் நிகோலய் சச்தேவ் யார் என்பதை இணையத்தில் பலர் தேடி வருகின்றனர். இவர் கேலரி 7 என்கிற பெயரில் பெரிய ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து இருக்கிறார். அவருடைய அப்பா அருண் சச்தேவ் அம்மா சந்திரா சச்தேவ் இருவரும் சேர்ந்து 1970ம் ஆண்டு ஆர்ட் கேலரியை தொடங்கினார்கள். அவர்களுக்கு பிறகு நிகோலய் சச்தேவ் இந்த ஆர்ட் கேலரியை கவனித்து வருகிறார்.

Do you know who is Varalakshmi Sarathkumar s future husband Nikolai Sachdev

இரண்டாம் திருமணம்: நிகோலய் சச்தேவ்க்கு 2009ம் ஆண்டே கவிதா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் காசா சச்தேவ், 15 வயதாகும் இவர் விளையாட்டு வீராங்கனையாக இருக்கிறார். நிகோலய் சச்தேவ் 41வயதாகும் நிலையில், 38 வயதாகும் வரலட்சுமி அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 14 வருட காதல் என்று சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X