குளு குளு வெண்பனி போல... டாக்டர் நடிகை பிரியங்கா மோகன்!
சென்னை : டாக்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்தார்.
Recommended Video
இப்பொழுது டாக்டர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சூழலில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.
டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன் இப்பொழுது குளு குளு வெண்பனி போல இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

பிரபலமான நடிகையாக
தெலுங்கில் நடிகர் நானியின் நடிப்பில் வெளியான கேங்லீடர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமான நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் மிக சரளமாக பேசக்கூடிய இவர் டாக்டர் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கோலமாவு கோகிலா என்ற பிளாக்பஸ்டர் படத்திற்கு பிறகு இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தை இயக்கியுள்ளார்.

வசூல் வேட்டை
மருத்துவத்துறையில் உடல் உறுப்புகளை திருடும் மாஃபியா கும்பலை மையப்படுத்திய படமாக உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் சென்ற ஆண்டே ரிலீசுக்கு தயாராக இருந்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக இதன் வெளியீட்டுத் தேதி தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. திரையரங்குகளில் வெளியாவது தாமதமானதால் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என தெரிவிக்கப்பட்டது. பின் ஒரு வழியாக கடந்த வாரம் திரையில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
டாக்டர் படத்தில் கதாநாயகியாக க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள பிரியங்கா மோகனுக்கு முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்பொழுது டான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கி வருகிறார்.

குளு குளு வென்பனி போல
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா அதைத் தொடர்ந்து மேலும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. நடித்த முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா மோகன் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளு குளு வெண்பனி போல செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications