'செகண்ட் இன்னிங்ஸை' வெற்றிகரமாக தொடங்கிய நயனதாராவுக்கு 'ஸ்கின்' பிரச்சினையா?
ஹைதராபாத்: நயன்தாரா தோல் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுவதாக டோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது.
நயன்தாராவின் செகன்ட் இன்னிங்ஸ் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அவருக்கு விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அவரும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க அவர் பற்றி காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நயன் பற்றி புதிய தகவல் கிடைத்துள்ளது.

தோல் பிரச்சனை
நயன்தாராவுக்கு தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளது என்று டோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது. ஓவராக மேக்கப் போடுவதால் தான் அவருக்கு இந்த அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் வைத்தியம்
அசைவ உணவு சாப்பிட்டால் நயனின் தோல் அலர்ஜி பிரச்சனை அதிகரித்துவிடுகிறதாம். இந்த பிரச்சனைக்கு அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறாராம்.

சின்ன விஷயம்
தோல் அலர்ஜி சாதாரண விஷயம். ஆனால் இதை மீடியா பெரிதுபடுத்துகிறது என்று நயனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சிலர் நயனுக்கு தோல் பிரச்சனை என்பவது வெறும் வதந்தி என்கின்றனர்.(வதந்தியாக இருந்தால் நல்லது)

சமந்தா
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு தோல் பிரச்சனை ஏற்பட்டதால் அவர் 3 மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்த பிரச்சனையால் அவரால் ஷங்கரின் ஐ படத்தில் நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











