கல்யாணத்தைப் பத்தி மட்டும் பேசவேப் படாது... டென்ஷனாகும் தபு
மும்பை: நடிகை தபுவிடம் போய் உங்களுக்கு கல்யாணம் எப்ப என்று கேட்டால் அடிக்காத குறையாக டென்ஷனாகி விடுகிறார். அந்தக் கேள்வியை மட்டும் கேட்காதீங்க என்று அன்போடு கேட்டுக் கொள்கிறார்.
பாலிவுட்டுக்குக் கிடைத்த சிறந்த நடிகைகளில் தபுவும் ஒருவர். அவரது வயதை ஒத்தவர்கள் பலரும் திருமணமாகி செட்டிலாகி வி்ட்டனர். ஆனால் தபு மட்டும் தனியாகவே இருக்கிறார்.
கடந்த ஆண்டுதான் வித்யா பாலன், கரீனா கபூர் என பலரது திருமணங்களைப் பார்த்தது பாலிவுட். இந்த நிலையில் தபு பக்கம் பாலிவுட்டினரின் பார்வை திரும்பியுள்ளது.

எப்ப கல்யாணம் தபு...
தபுவிடம் யாராவது போய் திருமணம் எப்ப என்று கேட்டால், திருமணத்தைப் பற்றி மட்டும் தயவு செய்து கேட்காதீர்கள். இதுகுறித்துப் பேசி பேசி டயர்ட் ஆகி விட்டேன் விட்ருங்க என்கிறார்.

41 வயசாயிருச்சே
41 வயதாகிறது தபுவுக்கு. கடைசியாக அவர் ஆங் லீயின் லைப் ஆப் பை படத்தில் நடித்திருந்தார். ஏன் அதிக படங்களில் நடிப்பதில்லை என்று கேட்டால், தேர்வு செய்துதான் நடிப்பேன். முன்பு நல்ல ரோல்கள் கிடைத்தால் நடித்தேன். இப்போது வித்தியாசமான பாத்திரங்களைத் தேடுகிறேன்.

பணம் போதும்
எனக்குப் பணம் தேவையில்லை. கிடைத்த வரை போதும். வித்தியாசமான பாத்திரங்கள்தான் எனக்குத் தேவை என்று கூறுகிறார்.

சல்மானுக்கு சகோதரி
சல்மான் கானின் மென்டல் படத்தில் தற்போது நடித்து வருகிறார் தபு. அதில் சல்மானின் சகோதரியாக வருகிறாராம்.

சரி நீங்க தெலுங்கானாவா.. ஆந்திராவா
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் தபு. எனவே அவரிடம் தெலுங்கானா பற்றிக் கேட்டால் மறுபடியும் டென்ஷனாகி விட்டார். அர்ரே... அரசியல் கேள்வியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்று எழுந்து போய் விட்டார்.


Click it and Unblock the Notifications











