யாருக்கு கல்யாணமானால் எனக்கென்ன?: கடுகடுக்கும் அனுஷ்கா

By Siva

ஹைதராபாத்: அனுஷ்காவிடம் திருமணம் பற்றி கேட்டால் எரிந்து விழுகிறாராம்.

ரெண்டு படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. ஆனால் அப்படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கில் முதன்முதலில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தாலும் அனுஷ்காவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்த படம் அருந்ததி.

அதன் பிறகு அவர் தமிழில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த வேட்டைக்காரன் ஊத்திக் கொண்டாலும் சிங்கம் அவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம்

அனுஷ்கா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் ருத்ரம்மா தேவி அவருக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

கோபிசந்துடன் காதல்

கோபிசந்துடன் காதல்

தெலுங்கு ஹீரோ அதாவது ஜெயம் படம் வில்லன் கோபிசந்துக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்று டோலிவுட்டில் பேசப்பட்டது. இந்நிலையில் கோபி சந்துக்கு திடீர் என்று திருமணம் செய்து கொண்டார்.

யாருக்கு திருமணமானால் எனக்கென்ன?

யாருக்கு திருமணமானால் எனக்கென்ன?

கோபிசந்துக்கு திருமணமாகிவிட்டது நீங்கள் எப்பொழுது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்று அனுஷ்காவிடம் கேட்டால், யாருக்கு திருமணம் ஆனால் எனக்கென்ன என்று எரிந்து விழுகிறாராம். பிறருக்கு திருமணமானால் நானும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா என்ன என்று கேட்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X