twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ருஷ்டியைத் தடுக்காதீர்கள்- ஷ்ரியா வேண்டுகோள்!

    By Sudha
    |

    சல்மான் ருஷ்டி இந்தியா வருவதைத் தடை செய்யக் கூடாது என்று நடிகை ஷ்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.

    கவர்ச்சிகரமான, வசீகரமான நடிகைகளில் ஒருவர் ஷ்ரியா. சினிமா மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் கூட ஆர்வம் அதிகம் கொண்டவர் ஷ்ரியா. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வும் இவருக்கு அதிகம். சிறந்த நடனக்காரரான ஷ்ரியா, கதக் நடனத்தில் வல்லவர்.

    வாழ்க்கையை இயல்பான போக்கில் எதிர்கொள்ளும் மனோபாவம் கொண்ட ஷ்ரியா, சல்மான் ருஷ்டி சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியைப் போன்ற மிகப் பெரிய இலக்கியவாதிகளை விலக்கி வைப்பது என்பது சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகும். அவரது படைப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்கிறோம். ஆனால் மாற்றுக் கருத்துடைய ஒருவரை நாம் ஏற்க மறுக்கிறோம். ருஷ்டியின் இந்திய வருகைக்கு எதிர்ப்புக் கிளம்பியது தேவையில்லாதது, காரணமற்றது.

    ருஷ்டியின் கருத்துக்களில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாமே தவிர தடை செய்ய நினைப்பது தவறானது. எனவே தயவு செய்து ருஷ்டி இந்தியா வருவதை தடுக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள் என்றார் ஷ்ரியா.

    ருஷ்டி எழுதிய மிட்நைட் சில்ட்ரன் என்ற நாவல் தற்போது படமாகி வருகிறது. இதை தீபா மேத்தா இயக்குகிறார். இதில் ஷ்ரியாதான் நாயகியாக நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

    தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் ஷ்ரியாவிடம், நீங்கள் சிவாஜி படத்தில் நடித்து தமிழில் பிரபலமானீர்கள்.அதேபோல சிவாஜியின் ராஜ்ஜியத்திலும் (பாலிவுட்) புகழ் பெறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது மிகவும் வினோதமான ஒன்றுதான். ஆனால் ரஜினி ரூபத்தில் நான் மாவீரன் சிவாஜியைப் பார்த்தேன். ரஜினி ஒரு உண்மையான மராத்தி ஆவார். தமிழ்த் திரையுலகில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். தேசிய அளவிலும் ஒரு முக்கியச் சின்னமாக விளங்குகிறார்.

    சாதாரணமாக மனிதராக வாழ்க்கையை ஆரம்பித்து இன்று மிகப் பெரிய இடத்தில் இருக்கிறார். இதேபோலத்தான் மாவீரன் சிவாஜியின் வாழ்க்கையும் இருந்தது என்றார் ஷ்ரியா.

    தற்போது கலி கலி சோர் ஹைய் என்ற படத்தில் நடித்துள்ளார் ஷ்ரியா. இப்படத்தில் வீணா மாலிக் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளாராம். நீங்களே அந்தக் குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்காலமே என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பில்லை. காரணம், இப்படத்தில் நான் குடும்பப் பெண்ணாக வருகிறேன். அப்படி இருக்கையில், எப்படி குத்துப் பாட்டுக்கு ஆட முடியும் என்று கேட்டார் ஷ்ரியா.

    இருந்தாலும் இந்தியில் ஒரு கலக்கலான குத்துப் பாட்டுக்கு ஆட துடிப்போடு காத்திருக்கிறாராம் ஷ்ரியா!

    English summary
    Actress Shriya Saran has objected the ban against Salman Rushdie. She said, Keeping a man like Salman Rushdie away from the fest is illogical. We are the largest democracy in the world, so to take an autocratic view on Rushdie's visit to India is uncalled for, she said. "If people's sentiments have been hurt, they have a right to voice them. But don't ban him, please, she added.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X