என்னை போய் அவருடன் ஒப்பிடுவதா.. ச்சை.. கோபத்தில் கொதித்த யாஷிகா ஆனந்த்.. என்ன நடந்தது?
ரசிகர்கள் தன்னை கீழ் தரமாக விமர்சிக்க கூடாது, தனக்கு அது மன வருத்தத்தை தருகிறது என்று நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ரசிகர்கள் தன்னை கீழ் தரமாக விமர்சிக்க கூடாது, தனக்கு அது மன வருத்தத்தை தருகிறது என்று நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த், இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆகிவிட்டார். அதிலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவரை இளைஞர்கள் மத்தியில் வைரலாக்கியது.
அதன்பின் இவர் வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் நடித்த ஜாம்பி படத்தின் ஸ்னீக் பீக்குகள் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

வேறு என்ன
இதேபோல் இன்ஸ்டா, டிவிட்டர் போன்ற தளங்களில் இவரின் புகைப்படங்கள் தினமும் வைரலாவது வழக்கம். யாஷிகா மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் பல முறை டிரெண்டிங்கில் இருந்துள்ளார். ஆனால் இவருக்கு இன்னும் 20 வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யார்
இந்த நிலையில் யாஷிகாவை சில ரசிகர்கள் தமிழகத்தின் மியா கலீபா என்று கூறியுள்ளனர். பாலியல் ரீதியான 18+ படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மியா கலீபா. ஆனால் மியா கலீபா கடந்த சில வாரங்கள் முன், தான் மிகவும் வறுமையில் இருப்பதாக கூறி பேட்டி அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பலரும் கிண்டல்
இந்த நிலையில்தான் ரசிகர்கள், யாஷிகாவை மியா கலீபா போல இருக்கிறார் என்று கூறி கிண்டல் செய்துள்ளனர். இது யாஷிகாவை மன ரீதியாக வருத்தம் அடைய செய்துள்ளது. தன்னை எல்லோரும் மியா கலீபா என்று கிண்டல் செய்வது தனக்கு பெரிய மன அழுத்தத்தை தருவதாக யாஷிகா கூறியுள்ளார்.

என்ன பேட்டி
இது தொடர்பாக யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளதாவது, எனக்கு என்று சில தனித்துவம் இருக்கிறது. நான் மியா கலீபா கிடையாது. எனக்கும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் என்னை ஏன் அவருடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

தனி மரியாதை
எனக்கு என்று தனியாக சுயமரியாதை இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் சிலர் என்னை மிகவும் மோசமாக கிண்டல் செய்கிறார்கள். என்னை அப்படி சொல்பவர்கள் மீது எனக்கு கடும் கோபம் வருகிறது. இப்போதும் அவர்களை திட்டி வருகிறேன், என்று யாஷிகா குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











