சன்னி லியோனும் நானும் ஒண்ணா? சண்டைக்கு வரும் பூனம் பாண்டே
மும்பை: சன்னி லியோனுடன் என்னை ஒப்பிடுவதா? என்று செய்தியாளர்களிடம் சண்டைக்கு போயுள்ளார். நான் என்ன செக்ஸ் நடிகையா? என்னை எப்படி சன்னி லியோனுடன் ஒப்பிட்டு பேசலாம்.
பூனம் பாண்டே நடித்துள்ள நாஷா படம் வரும் 26ம் தேதி ரிலீசாக உள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்தான் இத்தனை கொந்தளிப்பு.
பூனம் பாண்டே முதன்முறையாக இப்போதுதான் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். அதற்கு முன்னதாகவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா கோப்பை ஜெயித்தால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று பரபரப்பாக பேசி பிரபலமானார்.
தொடர்ந்து அவர் அப்லோடு செய்த கவர்ச்சிப்படங்கள்தான் அவருக்கு பாலிவுட் படவாய்ப்பினை பெற்றுத் தந்தது. இந்த நிலையில் பூனம் பாண்டேவை சன்னிலியோனுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளனர்.

ஆபாச படம் போட்டேனா?
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பூனம், நான் என்ன ஆபாச பட நாயகியா? நீலப்படங்களில் நடித்து பதிவேற்றினேனா?

கொஞ்சூண்டு கிளாமர்
என்னுடைய ரசிகர்களின் திருப்திக்காக கொஞ்சமே, கொஞ்சம் கிளாமர் காட்டியுள்ளேன்.

மாதுரி தீட்ஷித் மாதிரி
ரேகா, மாதுரி தீட்ஷித், கஜோல் ஆகியோருடன் என்னை ஒப்பிடலாம், நான் அவர்களின் ரசிகை. ஆனால் சன்னி லியோனுடன் ஒப்பிட்டு விட்டார்களே.

டெரர் ஆகிவிடுவேன்
இதுதான் என்னுடைய கடைசி எச்சரிக்கை, யாராவது சன்னி லியோனுடன் ஒப்பிட்டால் நான் சும்மா இருக்கமாட்டேன்.

இதுவும் சமூக சேவைதான்
குறைந்த அளவில் டிரஸ் போட்டு நடிப்பது கூட ஒரு சமூக சேவைதான். ஏனெனில் என்னை பெரும்பாலான ரசிகர்கள் ரசிக்கிறார்கள். ஆனால் அது எப்படியோ எம்.எம்.எஸ் மூலம் பரவிவிட்டது என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
எல்லாம் ஒரு பப்ளிகுட்டி ஸ்டண்ட்தான் போங்க!


Click it and Unblock the Notifications











