'போலீஸ் நிற்கிறாய்ங்க, மண்ட பத்தரம்' மாஸ்க் அணிந்து சென்ற ஹீரோயினை கருணையின்றி கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: மாஸ்க் அணிந்து கொண்டு மளிகை கடைக்குச் சென்ற பிரபல நடிகையை ரசிகர்கள் கண்டபடி கலாய்த்துள்ளனர்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கிய, ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார்.

டிக் டிக் டிக்

டிக் டிக் டிக்

பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார்.
இதையடுத்து ஜெயம் ரவி ஜோடியாக, டிக் டிக் டிக் படத்தில் நடித்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் ஆண்டனி ஜோடியாக, 'திமிரு பிடிச்சவன்' படத்தில் நடித்திருந்தார். அடுத்து விஜய் சேதுபதி ஜோடியாக, சங்கத்தமிழன், பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மளிகை பொருட்கள்

மளிகை பொருட்கள்

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுடன் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் மாஸ்க் அணிந்தபடி மளிகை பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார்.

View this post on Instagram

Off I go............. to the grocery 🤦🏼‍♀️

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

மண்ட பத்திரம்

இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து கமென்ட் போட்டுள்ளனர். 'வெளியில போலீஸ் நிக்கிறாய்ங்க... மண்ட பத்திரம்' என்று சிலர் கமென்ட் அடித்துள்ளார். இன்னும் சிலர், போலீஸ் வெயிட் பண்ணிட்டே இருக்காங்க, கையில லத்தி வேற வச்சிருக்காங்க...பாத்துப் போங்க' என்று கூறியுள்ளனர்.

சுருக்கு பை

சுருக்கு பை

இன்னும் சில ரசிகர்கள், நீங்க போட்டிருக்கிற மாஸ்க் உங்களை காப்பாத்தாது, அது ஒன்டைம் யூஸ் பண்றது...கையில் க்ளவுஸ் போட்டுங்க என்று கூறியுள்ளனர். ஒரு ரசிகர் அதுயென்ன இடுப்புல? என்ன ஆயாவோட சுருக்கு பை மாதிரியே இருக்கு? என்று கேட்டுள்ளனர். 'பேசாமா வீட்டுலயே இருங்க...கொரோனா கன்னாபின்னான்னு சுத்துதாமே' என்று சிலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X