வெள்ளை புலி விஜய்யை கொல்லாதீர்கள்: பிரணாபுக்கு த்ரிஷா கோரிக்கை
சென்னை: டெல்லி விலங்கியல் பூங்காவில் வாலிபரை கொன்ற வெள்ளை புலி விஜய்யை கொலை செய்ய வேண்டாம் என்று நடிகை த்ரிஷா ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி விலங்கியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலி விஜய் கடந்த செவ்வாய்க்கிழமை 20 வயது வாலிபரை கடித்துக் குதறி கொலை செய்தது. அந்த புலி யாரையும் கொன்றது கிடையாது என்று பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த புலியை பார்க்க விலங்கியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இந்நிலையில் அந்த புலியை கொலை செய்து விடாதீர்கள் என்று கூறி பலர் ஆன்லைனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதுகிறார்கள். விலங்கு பிரியரான நடிகை த்ரிஷாவும் புலியை கொன்றுவிட வேண்டாம் என்று கூறி பிரணாபுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை அவர் ட்விட்டர் மூலம் விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











