twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படி நல்ல டான்ஸ் ஆடுங்க.. பயப்படாதீங்க.. ஜாலியா இருங்க.. மாதுரி தீக்ஷித் செம அட்வைஸ்!

    |

    மும்பை: பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித் பதிவிட்டுள்ள கொரோனா வைரஸ் குறித்த பதிவு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

    கொரோனா வைரஸ் காரணமாக உலகமே பீதியில் நடுங்கி கிடக்கும் நிலையில், பெண் ஒருவர் வீட்டில் ஜாலியாக ஆடி பாடி சமையல் செய்யும் வீடியோ ஒன்றை மாதுரி தீக்‌ஷித்தின் ரசிகர் ஒருவர் அவருக்கு ட்வீட் செய்திருந்தார்.

    52 வயதிலும் இளமை மாறாத அழகுடன் இருக்கும் நடிகை மாதுரி தீக்‌ஷித், அந்த வீடியோவை பார்த்து, தான் மிகவும் ரசித்ததாகவும், வீட்டில் நாம் செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன.

    வீட்டில் முடங்கிப் போயுள்ளோம் என நினைக்காமல், இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டு குடும்பத்தினர் உடன் மனம் விட்டு பேசுங்கள், வீட்டிலேயே வொர்க்கவுட் செய்யுங்கள், டான்ஸ் ஆடுங்கள், பாடுங்கள், என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் செய்யுங்கள்.

    Don’t Panic about Coronavirus, Use the moment well – Maduri Dixit!

    பிசி ஷெட்யூலில் வெளியே ஓடி ஓடி அலைந்து திரிந்த நமக்கு, இந்த காலம் ஓய்வு காலம் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு அமைதியுடனும், சந்தோஷத்துடனும் இருக்க பழகிக் கொண்டால், கொரோனா குறித்து தேவையற்ற பயம் கொள்ளவோ, கவலையடையவோ தேவையில்லை என மாதுரி தீக்‌ஷித் பதிவிட்டுள்ளார்

    நடிகை மாதுரி தீக்‌ஷித்தின் இந்த நம்பிக்கை ஊட்டும் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், அவருக்கு பாராட்டுக்களையும், பத்திரமாக இருங்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    கமல்ஹாசன், சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த மாதுரி தீக்‌ஷித், சமீபத்தில் வெளியான கலன்க் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அனைவரும் தற்போது, வீட்டுக்குள் அதிக நேரத்தையும், குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

    English summary
    Maduri Dixit tweeted, There are soo many things that we can do at home, spend time with our loved ones, learn & discover new things, workout, dance, sing & do whatever you never got to do because of your busy schedule.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X