உலகம் அழியாது… இது காஜல் அகர்வால் ஜோசியம்!
உலகம் அழிந்துவிடுமா? இல்லையா? ஊரே அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருக்கையில் துப்பாக்கி படம் ஹிட்டான குஷியில் உலகம் கண்டிப்பாக அழியாது என்று ஜோசியம் சொல்லியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
மாற்றான் அவுட் ஆனவுடன் காஜலும் அவுட் என்று பேசியவர்கள் துப்பாக்கி வெற்றிக்குப் பின்னர் காஜல் அகர்வாலை போட்டி போட்டு புக் செய்கின்றனர். இப்போது தெலுங்கில் நான்கு படம், தமிழில் கார்த்தியுடன் மீண்டும் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அண்ணன், தம்பி என மாறி மாறி நடித்து வரும் காஜல் அகர்வால் கண்டிப்பாக ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்ளமாட்டாராம். ஒருவிழாவில் பங்கேற்றபோது இதை அவரே கூறியுள்ளார்.

எல்லாம் கடவுள் செயல்
இப்போது தமிழ், தெலுங்கில் எனக்கு நல்ல படங்கள் அமைந்துள்ளன. இதற்கு கடவுள்தான் காரணம். துப்பாக்கி வெற்றி என்னை தமிழ் படங்களில் வாய்ப்பினை அதிகரித்துள்ளது.

நான் இன்னும் லவ் பண்ணலை
யாரையாவது காதலிக்கிறீர்களா? எப்போ திருமணம் என்று கேட்கின்றனர். திருமணம் செய்து கொள்வதற்கு மனதுக்கு பிடித்த மனிதரை இன்னும் நான் சந்திக்கவில்லை

நடிகரையா? நோ நோ…
சினிமாவில் உள்ளவர்களோ, நடிகரையோ நான் திருமணம் செய்ய மாட்டேன். தொழிலதிபரைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன். என்னையும் எனது குடும்பத்தையும் பார்த்துக் கொள்பவராக இருந்தால் காதல் திருமணம் செய்வேன். அப்படி யாரும் கிடைக்காவிட்டால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவேன்.

உலகம் கண்டிப்பாக அழியாது
உலகம் அழிந்து விடும் என்கிறார்கள். அதை நான் நம்ப மாட்டேன். உலகம் கண்டிப்பாக அழியாது. அதெல்லாம் விளம்பரத்திற்காக பரப்பும் வதந்தி.


Click it and Unblock the Notifications











