த்ரிஷாவிடம் ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்காதீங்க

த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். ஆனால் இன்னும் அவருக்கு மவுசு குறையவில்லை. அவர் கோடி ரூபாய் கேட்டாலும் அதை கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். தென்னிந்திய நடிகைகளில் தற்போது அதிகம் சம்பளம் வாங்குவது கூட திர்ஷா தான் என்று பேச்சு அடிபடுகிறது.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் நடிக்க வந்த புதிதில் இருந்தது மாதிரியே இப்பொழுதும் இளமையாக இருக்கிறார் த்ரிஷா. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது. அவரது ரசிகர்கள் யாராவது அவரிடம் சென்று ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்டால் அறிவுரை கூறுகிறாராம்.
ரூபாய் நோட்டில் எல்லாம் ஆட்டோகிராப் போடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பிவிடுகிறாராம் அம்மணி.
Comments


Click it and Unblock the Notifications