மூன்றாம் கல்யாணத்த யோசிக்காதீங்க.. 2வது திருமணத்தில் சம்யுக்தா சண்முகநாதனுக்கு மாமனார் செய்த அட்வைஸ்

சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதனுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துக்கும் கடந்த வருடத்தில் திருமணம் நடந்தது. இரண்டு பேருக்குமே அது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. சம்யுக்தாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகனும் இருக்கிறார். தற்போது குடும்பம் சகிதமாக ஜாலியாக இருக்கிறார்கள் மூன்று பேரும். இந்நிலையில் திருமணத்தின்போது தனது மாமனார் ஸ்ரீகாந்த் செய்த அட்வைஸ் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் சம்யுக்தா.

சம்யுக்தா சண்முகநாதனுக்கு மாடலிங் மூலம் திரைத்துறை கதவுகள் திறந்தன. அதன்படி அவர் நடித்த ஷி, குத்துக்கு பத்து, காஃபி வித் காதல், காரி, குருமூர்த்தி, வாரிசு, மெட்ராஸ் மாஃபியா கம்பெனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து சினிமாவில் நடித்துவந்தாலும் இதுவரை அவர் எதிர்பார்த்த வெற்றி பெரிய அளவில் கிடைக்கவில்லை. வாரிசு படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் அதுவும் ஹிட்டாகவில்லை. இது ஒருபக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் சம்யுக்தா. அதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

Don t Think About Breakup or Third Marriage What Srikanth Advise Samyuktha Shanmuganathan Goes Viral
Photo Credit:

முதல் திருமணம்: இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் வீட்டு பெரியவர்களால் பார்த்து நடத்தி வைக்கப்பட்டது. மணம் முடிந்த சில காலம் இரண்டு பேரும் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென பிரச்னைகள் முளைத்து பெரிதாகின. நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்ததால் இனிமேலும் சேர்ந்து வாழ்வது எந்தவிதத்திலும் சரி வராது என முடிவு செய்து விவாகரத்து ஆகிவிட்டார்கள்.

Also Read
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது.. முதலமைச்சர், ரஜினி, கமல் வாழ்த்து!
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது.. முதலமைச்சர், ரஜினி, கமல் வாழ்த்து!

அனிருதாவுடன் பழக்கம்: துபாயில் ஒரு பெண்ணுடன் கார்த்திகேயன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும்; அதனால்தான் டைவரஸ் நடந்ததாகவும் ஒரு பேச்சு ஓடுவதுண்டு. கார்த்தியுடனான பிரிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக சம்யுக்தாவுக்கு; முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்துடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் விஜே பாவனாவால்தான் ஏற்பட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இரண்டு பேரும் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே காதலும் செய்ய தொடங்கிவிட்டார்கள். அனிருதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது திருமணம்: இரண்டு பேரின் காதலுக்கும் இரு வீட்டிலும் சம்மதம் கிடைத்தது. அதனையடுத்து கடந்த வருடம் சென்னையில் தங்களது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மத்தியில் வைத்து சிம்ப்பிளாக திருமணம் செய்துகொண்டார்கள். இந்தத் திருமணத்தின்போது சம்யுக்தாவின் மகனான ராயனும் அங்கே இருந்து தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்தார். அது அனைவரிடமும் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தத் திருமணத்துக்கு பிறகு சம்யுக்தா, அனிருதா, ராயன் ஆகிய மூன்று பேரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.

சம்யுக்தா பேட்டி: இந்நிலையில் சம்யுக்தா சண்முகநாதன் தனது மாமனார் செய்த அட்வைஸ் குறித்து பேசிய விஷயம் ட்ரெண்டாகியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் தொகுப்பாளரிடம் பேசும்போது, "இரண்டாவது திருமணம் என்பது எப்போதும் எளிமையானது. எதன் மீதும் எதிர்பார்ப்பு இருக்காது. சந்தோஷமாக இருக்கிறீர்களா என்றுதான் கேட்பார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் (சம்யுக்தாவின் மாமனார்) ஒரு விஷயம் சொன்னார். இங்கே பாருங்கள் உங்கள் இரண்டு பேருக்கும் இது இரண்டாவது திருமணம். எனவே காமெடி செய்துகொண்டிருக்காதீர்கள். அதாவது பிரேக் அப் செய்துகொள்ளலாம், மூன்றாவது திருமணம் செய்துகொள்ளலாம் என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதெல்லாம் வேலைக்கு ஆகாது. உங்கள் ரிலேஷன்ஷிப்புக்கு எது ஒர்க் அவுட் ஆகிறதோ அதை செய்யுங்கள் என கூறினார். அதுதான் அவர் செய்த ஒரே அட்வைஸ்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X